தியோரியா ;உத்தர பிரதேசத்தில், கன மழையால் வீடு இடிந்து விழுந்ததில், நேற்று அதிகாலையில் துாங்கிக் கொண்டிருந்த மூன்று பேர் பலியாகினர்.உ.பி.,யில் முதல்வர் யோகிஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தியோரியா பகுதியில் கூலித் தொழிலாளர்களான திலிப் கோந்த், ௩௫, இவரது மனைவி சாந்தினி, ௩௦, இருவரும், தங்களது 2 வயது பெண் குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் இப்பகுதியில் கன மழை பெய்தது.
இதில், வீட்டின் சுவர்கள் ஈரமடைந்திருந்தன. நேற்று அதிகாலை, வீட்டில் அனைவரும் துாங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென வீடு இடிந்து விழுந்தது. இதில், மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர், இடிபாடுகளில் சிக்கி இருந்த உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவத்தை அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து, இறந்தவரின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement