காஷ்மீர்: ஸ்ரீநகரின் தால் ஏரியை தனி ஆளாக படகில் சென்று சுத்தம் செய்யும் மாணவி ஜன்னத்தை பலரும் பாராட்டுகின்றனர். ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரின் மிகவும் பழமையான தால் ஏரியை சுத்தம் செய்யும் பணியை பத்து வயதான மாணவி ஜன்னத் என்பவர் ஒற்றை ஆளாக மேற்கொண்டு வருகிறார். இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீநகரின் மிகவும் பிரபலமான அடையாளமாக கருதப்படுவதால் ஏரியை சுத்தம் ெசய்யும் ஜன்னத்தை பலரும் பாராட்டுகின்றனர். ஏரிக்குள் படகில் சென்று, அங்கு குவிந்திருக்கும் பாசிகள், அழுக்கு குப்பைகள், கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்களை தனது பிரத்யேக வலையில் அள்ளிப் போட்டு அதனை அப்புறப்படுத்துகிறார். இதுகுறித்து ஜன்னத் கூறுகையில், ‘எனது தனிப்பட்ட முயற்சியாவது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவும் என்று நம்புகிறேன். எதிர்காலத்தில் விஞ்ஞானியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’ என்றார்.