இந்தியாவில் பெரு நிறுவனங்களில் சிஇஓ-க்கும் சக ஊழியர்களுக்குமான சம்பள வித்தியாசம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
குறிப்பாக டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களில் சிஇஓ-க்கு பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கினால் ஊழியர்களின் சராசரி சம்பள அளவு ஆயிரங்களில் உள்ளது. இதுகுறித்த விவாதம் இந்திய டெக் நிறுவனங்கள் மத்தியில் அதிகரித்து வரும் வேளையில் OYO நிறுவனத்தின் சிஇஓ-வுக்குச் சம்பள உயர்வை வாரி வழங்கியுள்ளது.
அப்போ ஒரு வருட சம்பளம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..?
தாலிபான் எடுத்த திடீர் முடிவு.. சீனா நிறுவனங்கள் ஷாக்..!
OYO நிறுவனம்
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் சேவை நிறுவனமான OYO கடந்த 3 வருடத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு இருக்கும் வேளையில், இந்நிறுவனத்தின் முக்கிய முதலீட்டு நிறுவனமான சாப்ட்பேங்க் அதிகப்படியான நஷ்டத்தை எதிர்கொண்டு வந்தது. இந்த நிலையில் புதிய முதலீட்டை ஈர்க்க OYO மும்பை பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டது.
DRHP அறிக்கை
OYO நிறுவனம் ஏற்கனவே ஐபிஓ வெளியிட்ட திட்டமிட்டுச் செபி அமைப்பிடம் ஒப்புதல் பெற்ற நிலையில், அனுமதி வழங்கிய கால அவகாசம் முடிந்த காரணத்தால் 2023ல் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு OYO நிர்வாகம் புதிதாக DRHP அறிக்கையைச் செபி-யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் தான் OYO நிறுவனத்தின் சிஇஓ ரித்தேஷ் அகர்வால் சம்பளம் குறித்த தரவுகள் கிடைத்துள்ளது.
5.6 கோடி ரூபாய் சம்பளம்
ரித்தேஷ் அகர்வால் உருவாக்கிய நிறுவனம் தான் OYO மிகவும் இளம் வயதில் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் சிஇஓ ஆனார். இந்நிலையில் முந்தைய ஆண்டை காட்டிலும் சுமார் 250 சதவீத சம்பள உயர்வுடன் கடந்த நிதியாண்டில் 5.6 கோடி ரூபாய் தொகையைச் சம்பளமாகப் பெறுகிறார் என OYO நிறுவனத்தின் DRHP அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சம்பளம், போனஸ் குறைப்பு
இதே அறிக்கையில் கடந்த நிதியாண்டில் OYO நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பளம், போனஸ் ஆகியவை குறைக்கப்பட்டு நிறுவனத்தின் செலவுகளைப் பெரிய அளவில் குறைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சம்பளத்தின் வளர்ச்சி
2020 நிதியாண்டில் ரித்தேஷ் அகர்வால்-ன் ஒரு வருடச் சம்பளம் 21.5 லட்சம் ரூபாயாக இருந்தது, 2021 ஆம் நிதியாண்டில் 1.6 கோடி ரூபாயாக உயர்ந்தது, 2022 ஆம் நிதியாண்டில் 5.6 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ESOP அளவீடு
மேலும் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கு பங்கு அதாவது ESOP-க்கான செலவு 153 கோடி ரூபாயில் இருந்து 2022 ஆம் நிதியாண்டில் 344 சதவீதம் உயர்ந்து 680 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
OYO CEO Ritesh Agarwal salary Rises 250 percent To 5.6 Crore; same period employee bonus, salary cut
OYO CEO Ritesh Agarwal salary Rises 250 percent To 5.6 Crore in Fy22 mentioned in new DRHP filled with Sebi; At same period oyo employee bonus, salary has been cut