500 ஊழியர்கள் வேலைநீக்கமா? கண்ணீரில் சாப்ட்வேர் குழுக்கள்!

வாகன தயாரிப்பில் குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஓலா நிறுவனம் 500 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக ஓலா நிறுவனத்தில் சாப்ட்வேர் குழுக்களில் வேலை பார்க்கும் பலர் வேலை நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறைந்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓலா: 500 பேர் திடீர் பணிநீக்கம்.. ஆடிப்போன டெக் ஊழியர்கள்..!

ஓலா நிறுவனம்

ஓலா நிறுவனம்

ஓலா நிறுவனம் இன்னும் சில நாட்களில் குறைந்தது 500 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும், இந்த ஊழியர்களில் பலர் ஓலா செயலியின் பல்வேறு அம்சங்களில் பணிபுரிந்ததாக கூறப்பட்டாலும் சாப்ட்வேர் குழுக்களில் உள்ள பலர் வேலைநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை குறைந்து வரும் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஓலா ஸ்கூட்டர்

ஓலா ஸ்கூட்டர்

கடந்த ஆண்டு டிசம்பரில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய ஓலா, கடந்த சில மாதங்களாக மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் 2,000 ஊழியர்களை ஓலா பணிநீக்கம் செய்தது. அதுமட்டுமின்றி பவிஷ் அகர்வாலின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜினாமா செய்துள்ளனர்.

பொறியியல் களம்
 

பொறியியல் களம்

வாகனம், செல், பேட்டரி, உற்பத்தி மற்றும் ஆட்டோமேஷன், தன்னாட்சி பொறியியல் ஸ்ட்ரீம்கள் மற்றும் ஆர் & டி திறன்களை உருவாக்குவதில் ஓலா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சாப்ட்வேர் அல்லாத பொறியியல் களங்களில் ஓலா எலக்ட்ரிக் தனது கவனத்தை அதிகரித்து வருவதால் சாப்ட்வேர் ஊழியர்கள் பலர் வேலைநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

கருத்து கூற மறுப்பு

கருத்து கூற மறுப்பு

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து ஓலா நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒருபக்கம் வேலைநீக்க நடவடிக்கை இருந்தாலும் இன்னொரு பக்கம் ஓலா நிறுவனம் தற்போது சுமார் 2000 பொறியியல் ஊழியர்களை கொண்டுள்ள நிலையில் அடுத்த 18 மாதங்களில் அதன் பொறியியல் திறமை குழுவை 5000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

விற்பனை குறைவு

விற்பனை குறைவு

ஒன்பது மாதங்களாக மின்சார வாகன சந்தையில் இருக்கும் ஓலா நிறுவனம், மென்பொருள், பேட்டரி செயல்திறன் மற்றும் சேவை சிக்கல்கள் குறித்து பல வாடிக்கையாளர் புகார்களை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 12,691 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாதமும் விற்பனை குறைந்து ஆகஸ்ட் மாதத்தில் 3,351 ஸ்கூட்டர்களை மட்டுமே விற்றுள்ளது.

சில்லறை விற்பனை கடைகள்

சில்லறை விற்பனை கடைகள்

ஓலா நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால் சமீபத்தில் வாடிக்கையாளர்களிடம் ஸ்கூட்டர்களை ஆன்லைனில் வாங்க விரும்புகிறீர்களா? அல்லது சில்லறை விற்பனை கடைகளில் வாங்க விரும்புகிறீர்களா? என்பது குறித்து கருத்து கேட்டார். பலர் சில்லறை விற்பனை கடைகளில் வாங்க விரும்புவதாக பதிலளித்த நிலையில் விரைவில் நாடு முழுவதும் சுமார் 200 சில்லறை விற்பனை கடைகளை திறக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ola likely to lay off atleast 500 employees including software teams

Ola likely to lay off atleast 500 employees including software teams | 500 ஊழியர்கள் வேலைநீக்கமா? கண்ணீரில் சாப்ட்வேர் குழுக்கள்!

Story first published: Tuesday, September 20, 2022, 6:52 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.