'SC தானே..?' மேடையில் அமைச்சர் பொன்முடி கேள்வி.. விழுப்புரத்தில் நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் மணம்பூண்டி புது நகர் பகுதியில் புதிய பகுதிநேர நியாய விலை கடையை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்துக்கொண்டார்.

விழா மேடையில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

“தமிழ்நாடு முதலமைச்சர்

அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும் உணவுப்பொருட்களை மாதந்தோறும் சரியான நேரத்தில், சரியான எடையில் தரமாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமாக வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் அவ்வப்பொழுது அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் ஆய்வு செய்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதன் அடிப்படையில் தற்போது அனைத்து நியாய விலை கடைகளிலும் பொருட்கள் சரியான நேரத்தில் தரமாக உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திமுக செய்த திட்டங்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

அப்போது எடுத்துக்காட்டிற்காக மேடையில் இருந்த முகையூர் ஒன்றியக் குழு தலைவரை அறிமுகப்படுத்தி பேசும் போது “நீங்கள் எஸ்.சி(SC) தானே..?” கேள்வி எழுப்பினர். அதற்கு ஒன்றியக்குழு தலைவர் எழுந்து நின்று ஆமாம் சார் என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

பின்னர், மேடையில் பெண்கள் அமர்வதற்கு உரிமை பெற்றுக்கொடுத்ததே திமுக தான் என்றும் உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்த உன்னத மனிதர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் புகழாராம் சூட்டினார்.

விஜய் மக்கள் இயக்கம் திறப்பு விழா; கிராம மக்கள் நெகிழ்ச்சி !

இந்த நிலையில் அமைச்சர் பேசிய வீடியோவை சிலர் எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் திமுக அமைச்சர் தாழ்த்தப்பட்டவர்களை அவதூறாக பேசியதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி, பெண்கள் சம உரிமை குறித்து பேசும் போது உதாரணத்திற்காக கூறிய விஷயத்தை எதிர்க்கட்சியினர் பெரிதாக்குகின்றனர் என்று திமுகவினர் பதிலளித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.