பெட்ரோல்,டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
8 பேர் கைது
புதுக்கோட்டை ஜெகதாபட்டின மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இவர்களை இலங்கை கடற்படையினர்
கைது செய்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ஒப்புதல்
8 ஐஐடிகளுக்கு இயக்குநர்களை நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். பாலக்காடு, திருப்பதி, தார்வாட், பிலாய், காந்திநகர், புவனேஸ்வர், கோவா மற்றும் ஜம்முவில் உள்ள ஐஐடிகளுக்கு நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதில் வெளியுறவுத்துறை எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: “கடந்த ஜூலை மாதத்தில் ரூ. 10.62 லட்சம் கோடி மதிப்பில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நாள் ஒன்றுக்கு 100 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
சென்னையை சேர்ந்த சுபினாபானு, அப்துல் கனி ஆகியோர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு இன்று 1 கோடியே 2 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கினர்.
இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்ட பின் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் 1 கோடியே 2 லட்சம் ரூபாய்க்கு உரிய வரைவோலையை நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த தொகையில் 15 லட்ச ரூபாயை அன்னதான அறக்கட்டளைக்கும், 87 லட்ச ரூபாயை திருப்பதி மலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் நடைபெற்று வரும் புதுப்பிக்கும் பணிக்கும் பயன்படுத்த அவர்கள் நிர்வாக அதிகாரி தர்மரா ரெட்டியிடம் கேட்டு கொண்டனர்.
மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை மீட்க தூதரகம் மூலம் இந்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்கள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்” எனவும் கோரியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளுக்கு லம்பி ஸ்கின் நோய் எனப்படும் தோல் கட்டி நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நோயிக்கு இதுவரை 60 ஆயிரம் வரை பசுக்கள் உள்ளிட்ட கால்நடை விலங்குகள் உயிரிழந்துள்ளன. இந்த நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் அம்மாநிலத்தில் இன்று போராட்டம் நடத்தினர்.
சென்னை நொளம்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது மக்களை காக்க வைத்து மெத்தனமாக பணி செய்த அதிகாரிகளை எச்சரித்தார்.
திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகின்றன.
இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள அறிக்கையில், “திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணியளவில் ஆன்லைனில் வெளியாகும்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தாய்லாந்து நாட்டிற்கு வேலை தேடிச் சென்ற தமிழக இளைஞர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மியான்மர் நாட்டுக்கு கடத்திச் சென்று, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப் படுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு இன்றைய தேவை என்பது நீதி மட்டும்தான். அத்தகைய நீதியின் தூதுவர்களாக சட்டம் படிக்கும் நீங்கள் எதிர்காலத்தில் திகழ வேண்டும்.
அதேநேரத்தில் ஏழைகளுக்காக வழக்குரைஞர்கள் வாதாட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
மியான்மரில் உள்ள பள்ளி ஒன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மத்திய சகாயிங் பிராந்தியத்தில் உள்ள லெட் யெட் கோன் என்கிற கிராமத்தில் நடந்துள்ளது.
கோவை மாநகராட்சி பள்ளியின் பயிலும் 9 மாணவிகள் வாந்தி மயக்கம் எடுத்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்தை பாலிஷ் செய்ய பந்துவீச்சாளர்கள் எச்சில் பயன்படுத்துவதற்கு நிரத்தர தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் தற்காலிகளமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நிரந்தர தடை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது
மதுரை உலக தமிழ்ச்சங்கத் நுலகத்திற்கு தேவையாக நூல்களை வாங்க நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாத திட்டங்களை கணக்கிட்டால், அது கணக்கிட முடியாத அளவில் இருக்கும். மதுரை தமிழச்சங்கத்தில் தற்போது 26035 நூல்கள் உள்ளதாக தமிழ்ச்சங்க துணை இயக்குனர் உயர்நீதிமனறம் மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளார்.
டெண்டர் முறைகேடு வழக்கில் தன்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தாக்கல் செய்த மனுவை வேறு அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை எம்பி எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் பிரகாஷ், டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது.
மோசடி ஆவண பதிவுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறை வரும் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. மோசடி ஆவணம் மூலம் பெறும் நிலங்களை, நில உரிமையாளர்களுக்கே திரும்ப வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது
ஆன்லைன் மூலம் பதிவு அல்லது ரத்து செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் திடீர் ஆய்வு மக்களுக்கு நல்ல பலன்களை அளித்துள்ளது என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் காய்ச்சல் பரவல் எதிரொலியாக மாணவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டு பள்ளிகளில் புகை மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் காய்ச்சல் அதிகம் உள்ள கிராமங்களில் புகை மருந்து அடிக்கும் பணி தீவிரம்டைந்துள்ள நிலையல், மாணவர்கள் இடையே காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம், வாழப்பாடி அரசுப் பள்ளியில் வீட்டுப்பிரச்சினை காரணமாக சாணிப்பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற 2 மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திமுக சட்ட விதிப்படி துணை பொதுச்செயலாளர்களில் ஒருவர் மகளிராக இருக்க வேண்டும். இந்த ஆண்டு பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் வர உள்ளதாக டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் கோவையிலிருந்து அக்.1 முதல் 4ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனுவை, எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம் செய்து பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு உத்தரவிட்டனர்.
தமிழகம் முழுவதும் நாளை 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும்.காய்ச்சல் அல்லது அறிகுறிகள் இருந்தால் மக்கள் முகாம்களுக்கு சென்று பரிசோதித்து கொள்ளலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். http://tnhealth.tn.gov.in என்ற இளையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அக்.12ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டும்
மியான்மர் தலைநகரில் உள்ள பள்ளி மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
மியான்மர் தலைநகரில் உள்ள பள்ளி மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு
சென்னை, விருகம்பாக்கத்தில் நடிகை பவுலின் தீபா தற்கொலை செய்துகொண்ட விவகாரம்
பவுலின் தீபாவின் காதலன் சிராஜுதின் விசாரணைக்கு வராததால் நாளை ஆஜராக காவல்துறை சம்மன்
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை திரிகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்தது
கடந்த 6ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் விடுதலை
சேலம் – கரூர் வழித்தட மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் 2 நாட்களுக்கு முழுமையாக ரத்து.
தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் பொறியியல் பணி காரணமாக இன்று மற்றும் நாளை ரயில்கள் ரத்து
தேனியில், முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு
அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது? – உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி
தேனியில், முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்து, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு
முறைகேட்டில் ஈடுபட்ட சார்பதிவாளரை பணிநீக்கம் செய்து அறிக்கை தாக்கல் செய்ய பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
சென்னை, அறிவாலயத்தில் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை
பொதுக்குழு, உட்கட்சி தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை. ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்பி., ஆ.ராசா ஆகியோர் பங்கேற்பு.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த கோரிக்கை வைத்தோம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எந்த திட்டமும் இல்லை – இபிஎஸ்
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கூட்டத்தொடரை 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல். ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு சட்ட மசோதா கொண்டுவரப்படுமா? என எதிர்பார்ப்பு
ஜெ.மரண அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட உள்ள
நெல்லையில் மாநில கல்விக் கொள்கை தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டம்
ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம்
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்பு
பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்பு
இந்தியாவில் சட்ட பல்கலைக்கழகத்தை நிறுவிய முதல் மாநிலம் தமிழகம் தான். அரசு சட்டக்கல்லூரி மூலம் கிராமப்புற மாணவர்கள் எளிதாக சட்டம் பயின்று வருகின்றனர் . அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
ஈரோடு : ஊமாரெட்டியூர் பகுதியில் வீடு கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து அபினேஷ் என்ற 6 வயது சிறுவன் உயிரிழப்பு – போலீசார் விசாரணை.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 64 அதிகரித்து ரூ.37,120க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,640க்கு விற்பனை.
திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகல். கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதியே முதலமைச்சர் ஸ்டாலினிடம் விலகல் கடிதம் அளித்துவிட்டதாக இன்றைய தேதியிட்டு அறிக்கை. 2009ஆம் ஆண்டிற்கு பிறகு இனி தேர்தலில் போட்டியிடாமல் கட்சி பணிகளை மட்டுமே மேற்கொள்வதாக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடமே தெரிவித்திருந்தேன். அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம் – சுப்புலட்சுமி ஜெகதீசன்
ராணிப்பேட்டை : அரக்கோணம், சோளிங்கர் பகுதிகளில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பிலிருந்த 3 காவலர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவு . அரக்கோணம் தலைமை காவலர் ரமேஷ், நகர காவலர் கண்ணன், சோளிங்கர் தலைமை காவலர் வேணு ஆகியோர் பணியிடை நீக்கம்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தில் பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ் தீயில் எரிந்து சேதம். விரைந்து சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை. புதிய சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் வழங்கவில்லை என குற்றச்சாட்டு
தேர்தலின் போது அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடையை ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 2 ஆயிரம் ஆக குறைக்க பரிந்துரை. மத்திய சட்ட அமைச்சகத்திற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் கடிதம்.