அதானி எடுத்த முக்கிய முடிவு.. அரண்டு போயுள்ள சிமெண்ட் நிறுவனங்கள்.. இது வேற லெவல் திட்டம்!

மும்பை: அதானி குழுமம் சில தினங்களுக்கு முன்பு தான் சிமெண்ட் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க உள்ளதாகவும், நாட்டின் முன்னணி லாபகரமான சிமெண்ட் தயாரிப்பாளராக உருவாக உள்ளதாகவும், அக்குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி கூறினார்.

சமீபத்தில் தான் அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஹோல்சிம் குழுமத்திடம் இருந்து அதானி வாங்கியது.

இதன் மதிப்பு 6.5 பில்லியன் டாலராகும். இதன் மூலம் இந்தியாவின் முனனணி சிமெண்ட் உற்பத்தியாளர்களில் ஒருவராக அதானி குழுமம் உருவெடுத்துள்ளது.

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. work from anywhere ஆப்ஷன் உடன் வேலை..!!

பங்குக்கு எதிராக கடனா?

பங்குக்கு எதிராக கடனா?

இதற்கிடையில் அதானி குழுமம் இந்த கையகப்படுத்தலுக்கு பிறகு, வெளி நாட்டு வங்கிகளில் அம்புஜா மற்றும் ஏசிசி பங்குகளை பிணையமாக வைத்து சில பில்லியன் டாலர் நிதியினை திரட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

எவ்வளவு பங்கு?

எவ்வளவு பங்கு?

அதானி குழுமம் சமீபத்திய மாதங்களாகவே இந்த கையகப்படுத்தல் குறித்த பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில், அம்புஜா சிமெண்டில் 63.15% பங்கும், ஏசிசி சிமெண்டில் 56.69% பங்கினையும் (இதில் அம்புஜா சிமெண்ட் மூலமும்) வாங்கியுள்ளது. தற்போது நாட்டிலேயே மிகப்பெரிய நாட்டிலேயே மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக மாற விரிவாக்கம் செய்யும் பொருட்டு நிதி திரட்டும் பணியிலும் இறங்கியுள்ளது.

அல்ட்ராக்டெக்கு- அடுத்து அதானி
 

அல்ட்ராக்டெக்கு- அடுத்து அதானி

கடந்த செப்டம்பர் 16 அன்று பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி சிமெண்ட்ஸ் இரண்டினையும் ஹோல்சிம்மிடம் இருந்து முழுமையாக கையபற்றியதாக, பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அல்ட்ராக்டெக் சிமெண்டிற்கு அடுத்ததாக அதானி குழுமம் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.

எவ்வளவு கடன்

எவ்வளவு கடன்

இந்த வெற்றிகரமான கையகப்படுத்தலுக்கு பிறகு 14 சர்வதேச வங்கிகளிடம் இருந்து, 4.5 பில்லியன் டாலர் நிதியினை இந்த நிறுவனம் கடனாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பார்க்லேஸ் வங்கி மற்றும் டாய்ச் பேங்க் ஏஜி உள்ளிட்டவையும் அதானி குடும்பத்திற்கு ஆலோசகர்களாக செயல்பட்டுள்ளன. ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியும் ஆலோசகராக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒப்புதல்

ஒப்புதல்

இதற்கிடையில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிர்வாகக் குழு, அம்புஜா நிறுவனத்திற்கு 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை வாரண்டுகள் மூலம் பெற ஒப்புதல் அளித்துள்ளது. இது மேற்கொண்டு இந்த சிமெண்ட் குழுமத்தியினை பிரம்மாண்ட விரிவாக்கம் செய்யவும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல முக்கிய நபர்கள் நியமனம்

பல முக்கிய நபர்கள் நியமனம்

முன்னதாக அதானியின் மூத்த மகன் இயக்குனர் குழுவில் நியமிக்கப்பட்ட நிலையில், அவருடன் எஸ்பிஐயின் முன்னாள் தலைவர் ரஜ்னீஷ் குமார், மகேஸ்வர் சாஹு, அமீத் தேசாய், பூர்வி ஷெத், அஜய் கபூர் என பலரும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gautam Adani pledges entire Ambuja, ACC stake to fund $6.5 billion dollar

Gautam Adani pledges entire Ambuja, ACC stake to fund $6.5 billion dollar/அதானி எடுத்த முக்கிய முடிவு.. அரண்டு போயுள்ள சிமெண்ட் நிறுவனங்கள்.. இது வேற லெவல் திட்டம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.