புதுடில்லி : கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, பொதுப் பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்தே வழங்கப்படுகிறது என, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அரசியல்சாசனத்தின் 103வது பிரிவில் திருத்தம் மேற்கொண்டதன் வாயிலாக, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தியது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம்:
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு என்பது பொதுப் பிரிவினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்தே வழங்கப்படுகிறது. எனவே, எஸ்.டி., – எஸ்.சி., மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் இது பாதிப்பை ஏற்படுத்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement