இந்திய வங்கிகளில் வாராக் கடன் மற்றும் நிர்வாக முறைகேடுகள் அதிகரித்துள்ள நிலையில் ஆர்பிஐ கடுமையான கட்டுப்பாடுகள் மத்தியில் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்த கண்காணிப்பில் சிக்கிய ஒரு வங்கி அடுத்த சில மணிநேரத்தில் மூடப்படும் நிலையில் வங்கி நிர்வாகம் மற்றும் ஆர்பிஐ அதன் வாடிக்கையாளர்களை விரைவில் பணத்தை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளனர்.
யுபிஐ உடன் இணைக்கப்படும் ரூபே கிரெடிட் கார்டு.. 3 வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
எந்த வங்கி தெரியுமா..?
ரூபாய் கூட்டுறவு வங்கி
புனே நகரத்தை சேர்ந்த ரூபாய் கூட்டுறவு வங்கியின் (Rupee Cooperative Bank) உரிமத்தை ரத்துச் செய்ததாக இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி செப்டம்பர் 22, 2022 முதல் ரூபாய் கூட்டுறவு வங்கி தனது செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிட்டு உள்ளது ஆர்பிஐ.
ஆர்பிஐ
ஆர்பிஐ இதுக்குறித்து வெளியிட்ட அறிக்கையில் ரூபாய் கூட்டுறவு வங்கிக்கு “போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள்” இல்லை என்பதால் வங்கியின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இணைப்பு
ரூபாய் கூட்டுறவு வங்கி, சரஸ்வத் வங்கியுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டு ரிசர்வ் வங்கியின் கொள்கை அனுமதியைப் பெற்ற பிறகு ரூபே கூட்டுறவு வங்கி 64,000 பேருக்கு மேல் தங்களது டெபாசிட் தொகையை மொத்தம் ₹700 கோடியை திருப்பிச் செலுத்திய பின், சரஸ்வத் வங்கி இணைப்பிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
தோல்விக்கான காரணம்
ரூபாய் கூட்டுறவு வங்கி, சரஸ்வத் வங்கியுடன் இணைப்பின் தோல்விக்கு முக்கியக் காரணம் 700 கோடி ரூபாய் வைப்பு நிதி வெளியேறிய நிலையில் வர்த்தக லாபங்கள் குறைந்த காரணத்தால் மறுப்புத் தெரிவித்ததுள்ளது சரஸ்வத் வங்கி.
5 லட்சம் ரூபாய்
மேலும் ரூபாய் கூட்டுறவு வங்கியில் வைப்பு நிதியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். ரூபாய் கூட்டுறவு வங்கி கலைக்கப்பட்டதும், தற்போதுள்ள டெபாசிட்தாரர்கள் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் அமைப்பிடமிருந்து 5 லட்சம் ரூபாய் வரையிலான தொகை பெற முடியும்.
This bank will shut down by september 22, take out your money soon
This bank will shut down by september 22, take out your money soon