கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இளைஞர் ஒருவர் காட்டு யானைக்கு உணவு கொடுத்து அதனை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக- கேரள எல்லையில் உள்ள சுங்கம் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக காட்டு யானை ஒன்று காலில் காயத்துடன் தவித்து வந்துள்ளது. இதனை கண்ட பிரவீன் என்ற இளைஞர், ஆற்றில் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் யானைக்கு உணவு அளித்து வந்துள்ளார். இதனால் பிரவீன் மீது யானைக்கு பாசமும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் யாரும் நெருங்குவதை விரும்பாத யானை, பிரவீனை மட்டும் தனக்கு உணவு வழங்க அனுமதித்தது.
இதை அறிந்த கேரள வனத்துறையினர், பிரவீனின் உதவியுடன் யானையை ஆற்றுப்பகுதியில் இருந்து சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். தற்போது காலில் அடிபட்ட யானைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இளைஞரின் பாசத்திற்கு யானை கட்டுப்பட்டு செயல்படுவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM