உலகின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் ஒன்றை அளித்துள்ளது.
இதன்படி ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட் மூலம் வாடகை செலுத்தினால் ஒரு சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இந்த அறிவிப்பை ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டது ஏன் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
6 லட்சம் கோடியை தொட்ட ஐசிஐசிஐ வங்கி.. எலைட் கிளப்-ல் சேர்ந்தாச்சு..!
ஐசிஐசிஐ வங்கி
அக்டோபர் 20 ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தினால் அந்த வாடகை தொகைக்கு 1% கட்டணம் வசூலிக்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதனால் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட் மூலம் வாடகை செலுத்துபவர்களுக்கு கூடுதலாக பணம் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1% கட்டணம்
ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் செய்து வந்தாலும், திடீரென ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்துபவர்களுக்கு 1% கட்டணம் வசூலிக்கவுள்ளது.
வாடகை
இதுவரை எந்த ஒரு வங்கியும் கிரெடிட் கார்டு மூலம் வாடகை வசூலிக்க கட்டணம் வசூலிக்காத நிலையில் ஐசிஐசிஐ வங்கி மட்டும் இந்த கட்டண அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 20 முதல்
அக்டோபர் 20 ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தினால் அந்த வாடகை தொகைக்கு 1% கட்டணம் வசூலிக்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதனால் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட் மூலம் வாடகை செலுத்துபவர்களுக்கு கூடுதலாக பணம் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 2%
ஏற்கனவே கிரெடிட் கார்டு வாயிலாக வாடகை பரிவர்த்தனை செய்ய RedGiraffe, Mygate, Cred, Paytm, Magicbricks ஆகிய தளங்கள் 1% கட்டணம் வசூலிக்கின்றன. இந்த நிலையில் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் மேற்கண்ட தளங்கள் மூலம் வாடகை செலுத்தினால் கூடுதலாக ஒரு சதவீதம் வரை செலவாகும் என்பதால் மொத்தத்தில் 2% வாடிக்கையாளருக்கு செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது
உதாரணம்
உதாரணமாக 10,000 ரூபாய் வீட்டு வாடகை ஒருவர் செலுத்துகிறார் என்றால் மேற்கண்ட தளங்கள் ஒரு சதவீதம் கட்டணம் வசூலித்ததால் 10,100 செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதே தொகையை ஐசிஐசிஐ வங்கி மூலம் செலுத்துவதாக இருந்தால் கூடுதலாக ஒரு சதவீதம் வசூலிக்கப்படுவதால் 10,,200 ரூபாய் வாடகை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 10,000 ரூபாய் வாடகை என்பது 10,,200 என குடியிருப்பாளர்களுக்கு கூடுதல் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சேவைக் கட்டணத்திற்கான காரணம் என்ன?
இந்த நடவடிக்கைக்கான காரணங்களை வங்கி அதிகாரப்பூர்வமாக கூறவில்லை என்றாலும், வாடகை செலுத்துவதை சிலர் தவறான பயன்படுத்துவதாகவும், அதனால் இந்த கட்டணம் என்றும் வங்கி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
கட்டணம்
கிரெடிட் கார்டு பணத்தை மாற்றுவதற்கு வரி இல்லாத வழியாக ஒருசிலர் வாடகை செலுத்துவது போல் பயன்படுத்தி கொள்வதாக கூறப்படுகிறது. வழக்கமாக, கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுக்க வங்கி 3% வரை கட்டணம் வசூலிக்கிறது. வாடகை செலுத்துவதாக தங்களுக்குள்ளாகவே பணத்தை பரிமாற்றம் செய்து வரியின்றி, சேவைக்கட்டணம் இன்றி கிரெடிட் கார்டு பயன்படுத்தப்படுவதால் இந்த கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி வட்டாரங்கள் கூறுகின்றன.
1% fee if you pay house rent by ICICI Bank credit card!
1% fee if you pay house rent by ICICI Bank credit card! | ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஷாக்.. இதை செய்தால் 1% கூடுதல் கட்டணம்