தங்கம் (gold price) விலையானது தொடர்ந்து 3வது அமர்வாக தொடர்ந்து சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது இன்னும் குறையுமா? குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பா? நிபுணர்களின் கணிப்பு?
தங்கத்தில் தொடர்ந்து செல் ஆஃப் டிரெண்டிங்கே உள்ள நிலையில், தொடர்ந்து சரிவினைக் காணலாமோ? தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
6 மாத சரிவில் தங்கம் விலை.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?
தங்கம் விலையில் அழுத்தம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 3வது நாளாக தொடர்ந்து சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து அழுத்தத்திலேயே இருந்து வருகின்றது. இது இன்றும் நாளையும் நடக்கவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில், கட்டாயம் வட்டி அதிகரிப்பு இருக்கலாம் என்ற கருத்துக்கு மத்தியில், தொடர்ந்து தங்கம் விலையானது அழுத்தத்திலேயே காணப்படுகின்றது.
எதிர்பார்ப்பு
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி அவுன்ஸூக்கு 1676 டாலர்கள் என்ற லெவலில் வலுவாக காணப்படுகின்றது. இன்று தொடங்கவிருக்கும் இரண்டு நாள் கூட்டத்தில் 75 – 100 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்ததினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம்
எனினும் பணவீக்க அழுத்தம் என்பது மேன்மை அடையத் தொடங்கியுள்ள நிலையில்,இது மேற்கொண்டு வட்டியை அதிகரிக்க தூண்டாது என்ற கருத்தும் இருந்து வருகின்றது. ஆக இந்த கூட்டத்தில் வரவிருக்கும் கூட்டத்தில் எடுக்கபப்டும் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். இது டாலர் மதிப்பு மற்றும் பத்திர சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்துமா? என்பதும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
வட்டியில்லா முதலீடு
வட்டி விகிதம் எதிர்பார்ப்பினை போல அதிகரித்தால், இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். இது மேற்கொண்டு தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் தங்கம் விலையானது கிட்டதட்ட 6 மாத சரிவில் காணப்படும் நிலையில் அது வாங்கவும் நினைக்கலாம். இதுவே தங்கம் விலையானது அதிகளவு சரியாமல் தடுக்கலாம்.
பவுண்ட் & யென் மதிப்பு
பிரிட்டீஷ் பவுண்ட் மதிப்பானது 1985 குறைந்தபட்ச மதிப்பினை எட்டியது. இதே ஜப்பானின் யென் மதிப்பு 1998ல் தொட்ட அளவினை எட்டியது. சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றமான நிலைக்கு மத்தியில், தங்கம் விலையினை பெரியளவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனா – தாய்வான் பிரச்சனை மேற்கொண்டு அதிகரிக்கலாமோ என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
ஆர்வம் இல்லை
தங்கம் விலையானது தொடர்ந்து குறைந்து வரும் போதிலும் இடிஎஃப்பில் இருந்து தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. ஆக முதலீட்டாளர்கள் குறைந்த விலையில் வாங்க ஆர்வம் காட்டவில்லை என்பதையே இது சுட்டிக் காட்டுகின்றது. ஆக ஃபெடரல் ரிசர்வ் வங்கி முடிவினை அடுத்து, தங்கம் விலையில் பெரியளவில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை 2.95 டாலர்கள் அதிகரித்து, அவுன்ஸுக்கு 1674 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. எனினும் தங்கம் விலையானது மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் 0.83% அதிகரித்து, 19.343 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. வெள்ளி விலை மீடியம் டெர்மில் அழுத்தத்தில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் பொறுத்திருந்து வாங்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
gold price on 21st September 2022: gold prices nearly in 6 month low
gold price on 21st September 2022: gold prices nearly in 6 month low/கிட்டதட்ட 6 மாத சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான வாய்ப்பா? இன்று எப்படியிருக்கு தெரியுமா?