சென்னை: கொரோனா விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ல் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடந்த போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போலீஸ் வழக்கு பதிந்தது. வழக்கை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
