தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு விழா ஆகியவற்றுக்கான திறன்காண் மெய்வல்லுநர் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புவிதரன் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
5.15 மீற்றர் என்ற சாதனையை நிலைநாட்டிய புவிதரன், 5 வருடங்களுக்கு முன் அதாவது, 2017 ஆம் ஆண்டு இலங்கையின் கோலூன்றிப் பாய்தல் வீரராக சாதனை நிலைநாட்டிய இஷார சந்தருவனின் 5.11 மீற்றர் என்ற முந்தைய தேசிய சாதனையை முறியடித்து தேசிய சாதனையைப் புதுப்பித்துள்ளார்.
இதேவேளை, இந்தப் போட்டியின் 400 மீற்றர் ஓட்டப் போடடியில் கலிங்க குமாரகே கலந்து கொண்டதுடன், அவர் 45.70 செக்கன்களில் தனது சாதனையை பதிவு செய்துள்ளார்.
Mohamed Faizul (T)