இந்தியாவில் இருக்கும் பெரு நிறுவனங்களுக்குக் கடந்த 3 வருடம் ராஜயோகம் என்றால் மறுக்க முடியாது, அதிகப்படியான முதலீடு, வர்த்தக விரிவாக்கம், வேகமாக வளர்ச்சி என அசத்தி வருகிறது.
இதேவேளையில் இந்திய நிறுவனங்களின் உரிமையாளர்களின் சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாகக் கௌதம் அதானி-யின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட வளர்ச்சி இந்திய மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருக்கும் பணக்காரர்களுக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
கௌதம் அதானி-யின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா…?
விப்ரோ அதிரடி.. 300 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. காரணம் Moonlighting..!!
கௌதம் அதானி
கௌதம் அதானி-க்கு சொந்தமான நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்த நிலையில் உலகப் பணக்காரர்கள் பட்டியிலில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ்-ஐ பின்னுக்குத் தள்ளி முதல் முறையாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்தார். இதுவரையில் எந்தொரு இந்தியரும் இந்த உரிய நிலையை அடைந்தது இல்லை.
IIFL Wealth – Hurun அறிக்கை
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள IIFL Wealth Hurun India Rich List 2022 தரவுகள் படி அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு நாளுக்கு 1,612 கோடி ரூபாய் வரையில் உயர்ந்து, அவருடைய மொத்த சொத்து மதிப்பு ஒரு வருடத்தில் இரு மடங்காகியுள்ளது.
5,88,500 கோடி ரூபாய்
கடந்த ஒரு வருடத்தில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 116 சதவீதம் உயர்ந்து 5,88,500 கோடி ரூபாயை சேர்த்துள்ளார். இதன் மூலம் அவருடைய மொத்த சொத்து மதிப்பு 10,94,400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
1,440 சதவீதம் வளர்ச்சி
இதேபோல் கடந்த 5 வருடத்தில் அடுத்தடுத்து வர்த்தகக் கைப்பற்றல், வர்த்தக விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் கௌதம் அதானி சொத்து மதிப்பு 1,440 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
7 நிறுவனங்கள்
அதானி குழுமத்தில் பல நிறுவனங்கள் இருந்தாலும், 7 நிறுவனங்கள் மட்டுமே மும்பை பங்குச்சந்தையில் உள்ளது. இந்த 7 நிறுவன பங்குகள் அடிப்படையிலான கௌதம் அதானி சொத்து மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது.
ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி
இதேவேளையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது, ஆனால் கௌதம் அதானி சொத்து மதிப்பு 5,88,500 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
அதானி எடுத்த முக்கிய முடிவு.. அரண்டு போயுள்ள சிமெண்ட் நிறுவனங்கள்.. இது வேற லெவல் திட்டம்!
Gautam Adani earns 1612 crore per day in last one year says IIFL Wealth Hurun India report
Gautam Adani earns 1612 crore per day in last one year says IIFL Wealth Hurun India, Check how much reliance industries Mukesh ambani earns last year