சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாறும் பிரபல நிறுவனம்.. உறுதி செய்த அதிகாரிகள்

சிங்கப்பூரில் தலைமை இடத்தை கொண்டிருக்கும் PhonePe இனி தனது தலைமையகத்தை இந்தியாவுக்கு மாற்றப் போவதாக அறிக்கை ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளது.

வால்மார்ட் குழுமத்தின் டிஜிட்டல் பணம் செலுத்தும் நிறுவனமான PhonePe இதுவரை அதன் தலைமையகத்தை சிங்கப்பூரில் வைத்து நிர்வகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒரு சில நிர்வாக காரணங்களுக்காக தற்போது சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு தலைமையகத்தை மாற்ற திட்டமிட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரீசார்ஜ்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் PhonePe, Paytm: இனி அந்த பக்கமே போகாதீங்க!

PhonePe நிறுவனம்

PhonePe நிறுவனம்

டிஜிட்டல் பணம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்று PhonePe என்பதும் இந்த நிறுவனத்தின் சேவை இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிளாட்பாரத்தில் காய்கறி கடை வைத்திருப்பவர்கள் கூட PhonePe சேவையை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் அதனால் பொதுமக்கள் எளிமையாக பணத்தை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PhonePe தலைமையகம்

PhonePe தலைமையகம்

இந்த நிலையில் இதுவரை PhonePe நிறுவனம் சிங்கப்பூரில் தலைமையகத்தை கொண்டு உலகம் முழுவதும் தனது சேவையை செய்து வந்த நிலையில் தற்போது சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு தலைமையகத்தை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் PhonePe நிறுவனத்தின் பங்குதாரரான ஃபிளிப்கார்ட் நிறுவனம் தொடர்ந்து சிங்கப்பூரிலேயே தலைமையகத்தை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

 பிளிப்கார்ட்
 

பிளிப்கார்ட்

இதுகுறித்து PhonePe செய்தி தொடர்பாளர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, ‘சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு எங்கள் தலைமையகத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தியாவுக்கு எங்கள் தலைமையகம் மாறும் என்றும் உறுதி செய்தார். ஆனால் அதே நேரத்தில் PhonePe நிறுவனத்தின் இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் சிங்கப்பூரிலேயே தலைமையகத்தை கொண்டிருக்கும் என்றும் அதில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

 இந்தியா வரவேற்பு

இந்தியா வரவேற்பு

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு தலைமையகத்தை மாற்றுவதற்கான காரணத்தை PhonePe நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றாலும் PhonePe நிறுவனத்தின் இந்த முடிவை இந்தியா வரவேற்றுள்ளது.

250 மில்லியன் பயனாளர்கள்

250 மில்லியன் பயனாளர்கள்

தற்போது இந்தியாவில் PhonePe நிறுவனத்திற்கு 250 மில்லியன் பயனாளர்கள் இருப்பதாகவும் ஒவ்வொரு மாதமும் ரூ.100 மில்லியனுக்கும் அதிகமாக PhonePe செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

PhonePe plans to move headquarters from Singapore to India!

PhonePe plans to move headquarters from Singapore to India! |சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாறும் பிரபல நிறுவனம்.. உறுதி செய்த அதிகாரிகள்

Story first published: Wednesday, September 21, 2022, 6:51 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.