இந்தியாவில் ஆயிரங்கள், லட்சங்கள் சம்பாதிக்கும் தனிநபர்கள் 25% வரி செலுத்துகின்றனர்.
ஆனால் கோடிகளில் வருமானம் ஈட்டும் கார்ப்ரேட் நிறுவனங்கள் எவ்வளவு வரி செலுத்துகின்றன தெரியுமா?
இந்த ஆண்டு அதிக வரி செலுத்திய நிறுவனங்கள் பட்டியலை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
உயர் சொத்து மதிப்பு தனிநபர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா 11வது இடம்..!
ரூ.11,536 கோடி
டிசிஎஸ் தனது மொத்த வருவாயில் 6.8 சதவீதத்தை அரசுக்கு வரியாகச் செலுத்துகிறது. இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் இரண்டாவது மிக மதிப்புமிக்க நிறுவனமாகவும் உள்ளது.
ரூ.11,079 கோடி
டாடா ஸ்டீல் தனது மொத்த வருவாயில் 8.4 சதவீதத்தை அரசுக்கு வரியாக செலுத்துகிறது. இந்நிறுவனம் உலகின் இரண்டாவது மிகப் பெரிய எஃகு உற்பத்தியாளர் ஆகும்.
ரூ.8,013 கோடி
JSW ஸ்டீல் தனது மொத்த வருவாயில் 6.6 சதவீதத்தை அரசுக்கு வரியாக செலுத்துகிறது. இந்தியாவில் மிக அதிக அளவில் ஆண்டுக்கு 1 கோடி டன் எஃகு உற்பத்தி மிகப் பெரிய நிறுவனம் JSW ஸ்டீல்.
ரூ.7,902 கோடி
இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி தனது மொத்த வருவாயில் 2.9 சதவீதத்தை அரசுக்கு வரியாக செலுத்துகிறது.
ரூ. 7,702 கோடி
ரிலையன்ஸ் தனது மொத்த வருவாயில் 1.6 சதவீதத்தை அரசுக்கு வரியாக செலுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளது.
ரூ.7,549 கோடி q
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனமான இந்தியன் ஆயில் தனது மொத்த வருவாயில் 1 சதவீதத்தை அரசுக்கு வரியாக செலுத்துகிறது. இந்நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பு, விநியோகம் மற்றும் ஏற்றுமதி நிறுவனமாக உள்ளது.
ரூ.7,260 கோடி
இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் தனது வருவாயில் 6.7 சதவீதத்தை வட்டியாக செலுத்துகிறது.
ரூ. 4,771 கோடி
ஐடிசி தனது மொத்த வருவாயில் 7.6 சதவீதத்தை அரசுக்கு வரியாக செலுத்துகிறது. இந்திய கூட்டு நிறுவனமானது புகையிலை துறையில் மிகப்பெரிய சந்தையை தன் வசம் கொண்டுள்ளது.
ரூ. 4,471 கோடி
இந்துஸ்தான் துத்தநாகம் உலகின் மிகப்பெரிய மற்றும் இந்தியாவின் ஒரே ஒருங்கிணைந்த ஜிங்க்-லெட் மற்றும் வெள்ளி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். நிறுவனம் தனது மொத்த வருவாயில் 14.5 சதவீதத்தை அரசுக்கு வரியாக செலுத்துகிறது.
ரூ. 4,366 கோடி
NTPC தனது வருவாயில் 3.6 சதவீதத்தை அரசுக்கு வரியாக செலுத்துகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி மற்றும் மின் பயன்பாட்டு நிறுவனமாகும்.
India’s Top 10 Highest Tax Paying Company
India’s Top 10 Highest Tax Paying Company