தன் இணையுடன் காமம் சுகிப்பதற்கு இதுதான் காலம் என்கிற வரையறையெல்லாம் கிடையாது. அதேபோல வயதிலும் வரையறை கிடையாது என்கின்றன பாலியல் தொடர்பான ஆய்வுகள்.
அதாவது, கணவன், மனைவிக்கு இடையேயான காமத்தில் காலமும் வயதும் கிடையவே கிடையாது. சூழலும் அவர்கள் விருப்பமும் மட்டுமே முக்கியம்.
தம்பதி விருப்பப்பட்டால் தினமும்கூட தாம்பத்திய உறவு கொள்ளலாம். துணை இருந்தால் காமத்தை வாழ்வின் கடைசி நாள் வரைக்கும்கூட அனுபவிக்கலாம்.
திருமணமான புதிதில் தாம்பத்ய உறவுக்குக் கொடுக்கப்படுகிற முக்கியத்துவம் காலம் நகர நகர வேலை, குழந்தை, அவர்கள் படிப்பு, சொந்த வீடு கட்டுதல் என்று அவற்றின் மீது சென்றுவிடும்.
அதாவது, செக்ஸின் முக்கியத்துவம் குறையாது. நம் கவனம் குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட மற்ற விஷயங்களின் பக்கம் சென்றுவிடும்.
வெளிநாடு, வெளியூர் என்ற பிரிவுகள் இன்றி ஒன்றாக வாழும் தம்பதி, விரும்பினால் தினமுமே உறவு கொள்ளலாம். இதனால், சம்பந்தப்பட்ட தம்பதியின் வாழ்நாள் 10 வருடங்கள் அதிகரிக்கும்.
ரத்த அழுத்தம் சீராக இருக்கும். படபடப்பு, மன அழுத்தம் குறையும். விளைவு, மாரடைப்பு வருவதும் 50 சதவிகிதம் குறையும். இன்னும் முக்கியமாக ஆண்களுக்கு புராஸ்ட்டேட் கேன்சரும் பெண்களுக்குக் கருப்பை கேன்சரும் வருவதற்கான வாய்ப்பும் குறையும்.
தினமும் உறவு கொள்வது நல்லது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. `தினமும் உறவு கொண்டால் உடம்பு வீக்காகிடும்’ என்று வாட்ஸ்ஆப் ஃபார்வேர்டுகள் வருகின்றனவா? அதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
செக்ஸ் வாழ்க்கை குறையும்போதுதான் திருமண வாழ்க்கையில் பிரச்னை வருவதற்கும், திருமணம் தாண்டிய உறவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு அமைகிறது. பல பிரச்னைகள் வராமல் தடுப்பதற்கான தாம்பத்ய ரகசியம் காமத்தில்தான் ஒளிந்து கொண்டிருக்கிறது.
அதனால்தான், பாலியல் மருத்துவர்கள், `Sex a day keeps the doctor and lawyer away’ என்கிறார்கள். அதாவது, தினமும் உறவு கொண்டால் மருத்துவரையும் வழக்கறிஞரையும் தள்ளி வைக்கலாம் என்பதே அதற்கு அர்த்தம்.