திருப்பதி கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்த சென்னை இஸ்லாமிய தம்பதிகள்

Religious Harmony: திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் அளித்த சென்னை இஸ்லாமிய தம்பதிகள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் இருப்பதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அப்துல் கனி மற்றும் சுபீனா பானு தம்பதிகள் இந்த அரிய மற்றும் பாராட்டத்தக்க நன்கொடையை அளித்துள்ளனர். இந்த தம்பதிகள், கோயிலுக்கு நன்கொடை வழங்குவது இது முதல் முறையல்ல. 2020 ஆம் ஆண்டில், கோவிட் -19 தொற்றுநோய் காலத்தின் போது, கோயில் வளாகத்தில் கிருமிநாசினிகளை தெளிக்க பல பரிமாண டிராக்டர் பொருத்தப்பட்ட தெளிப்பானை நன்கொடையாக வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்த இஸ்லாமிய தம்பதிகள் 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்த சென்னையைச் சேர்ந்த சுபீனா பானு மற்றும் அப்துல் கானி தம்பதியினருக்கு பல தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிற்து.

சமூக ஊடகங்களிலும் பலரும் இந்த தம்பதிகளை பாராட்டி வருகின்றனர். அதிலும், பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

இந்த தம்பதிகள், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அளித்துள்ள ஒரு கோடி ரூபாய் நன்கொடை எப்படி பயன்படுத்தப்படும் என்பது தெரியுமா? இந்த நன்கொடையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி ஓய்வு இல்லத்திற்கு தேவையான மரச்சாமான்கள் மற்றும் பாத்திரங்கள் வாங்குவதற்கு ரூ.87 லட்சம் பயன்படுத்தப்படும். அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு 15 லட்சம் ரூபாய்க்கு செலவு செய்யப்படும்.

உலகின் பணக்கார கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரிகளிடம் சென்னை தம்பதிகள் தம்பதியினர் நன்கொடையை வழங்கினார்கள். குடும்பத்தின் நன்கொடையை TTD செயல் அலுவலர் AV தர்மா ரெட்டி இந்த  நன்கொடையை பெற்றுக் கொண்டார். மத நல்லிணக்கத்தை பிறருக்கு எடுத்துச் சொல்லும் தம்பதிகளின் பெருந்தன்மைக்கு தர்மா ரெட்டி நன்றி தெரிவித்தார்.

நன்கொடை கொடுக்கும் நிகழ்ச்சியில் திருப்பதி திருமலை தேவஸ்தான (TTD) வேத பண்டிதர்கள் வேதசிர்வசனம் செய்தனர், கோவில் அதிகாரிகள் அப்துல் கனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.