மதுரையில் தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் நடந்த இறுதித்தேர்வில் தீண்டத்தகாத சாதி என்பது தொடர்பான கேள்வி இடம்பெற்றள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தென்பகுதியாக மதுரையில் உள்ள ஒரு தனியார் சி.பி.எஸ்.இ கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 19) நடைபெற்ற பள்ளி ஆறாம் வகுப்பு இறுதித்தேர்வின் சமூக அறிவியல் தேர்வு வினாத்தாளில் பம்பாய் பிரசிடென்சியின் “தீண்டத்தகாத சாதி” எது என்பது தொடர்பான கேள்வி இடம்பெற்றுள்ளது.
இந்த வினாத்தாளில் பகுதி 1-ன் சரியான பதிலை தேர்ந்தெடுங்கள் என்ற பிரிவில் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல் ஒற்வொரு கேள்விக்கும் 3 விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஏழு கேள்விகள் இடம்பெற்றுள்ள இந்த பிரிவில் கடைசி கேள்வியில், பம்பாய் பிரசிடென்சியில் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட சமூகம் எது? என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது.
இந்த கேள்விக்காக (அ) மஹர், (ஆ) நாயர் மற்றும் (இ) கோலி என 3 விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியிட்டப்பட்ட நிலையில், இந்த பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இது போன்ற உணர்ச்சியற்ற கேள்விகளை மாணவர்களிடம் கேட்டதற்காக பள்ளி நிர்வாகத்தை பலர் கணடித்து வருகின்றனர்.
அதே சமயம் இந்த உள்ளடக்கம் கிரேடு VI என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக பள்ளி நிர்வாகம் மின்னஞ்சல் மூலம் indianexpress.com க்கு தகவல் அளித்தது. சமூக அரசியல் வாழ்க்கை மற்றும் அத்தியாயம்2 – பன்முகத்தன்மை மற்றும் பாகுபாடு என்ற புத்தகத்தில் இருந்து இந்தகேள்வி கேள்வி கேட்கப்பட்டது.
“கிரேடு VI என்.சி.இ.ஆர்.டி ( NCERT) பாடப்புத்தகத்தின் சமூக மற்றும் அரசியல் வாழ்க்கை -I, 19-ம்- பக்கத்தில் உள்ள ஒரு பகுதியின் மூலம் கேள்வி கேட்கப்பட்டதாகவும், இதற்காக நாங்கள் வருந்துகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம் இநத தலைப்பின் நோக்கம் பழைய நாட்களில் இருந்த சமத்துவமின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காகவும், தீண்டாமை ஒரு குற்றம் என்று நம் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது. இது குறித்து எங்கள் குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil