’துணிவு’ டைட்டில் சுவாரஸ்யம்..வியாழன், ’வி’ சென்டிமென்டை கைவிட்ட அஜித்..ஃபார்முக்கு திரும்பிய வினோத்

சென்னை: நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் ஏகே.61 படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் டிரண்டாகி வருகிறது.

‘துணிவு’ எனப்பெயரிடப்பட்டு அஜித் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.

அஜித் தல டைட்டில் விவகாரத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் வியாழக்கிழமை சென்டிமென்ட், ‘V’ சென்டிமென்ட் தற்போது பின்பற்றப்படவில்லை. தனது நேர்கொண்ட பார்வை ஃபார்முக்கு வினோத் திரும்பி உள்ளார்.

வலிமை பட அப்டேட் செய்த சாதனை

நடிகர் அஜித் சமீப ஆண்டுகளில் நடித்து வெளிவந்த படங்கள் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய படங்கள், ரசிகர்களை மிகவும் காக்க வைத்து வெளியானது. கடைசியாக வெளிவந்த வலிமை படம் அதன் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். எந்த அளவுக்கு ரசிகர்கள் காத்திருந்தார்கள் என்றால் “எனக்கு ஓட்டு போட்டால் வலிமை பட அப்டேட்டை வெளியிட வைப்பேன்” என்று தேர்தல் நேரத்தில் ஒரு வேட்பாளர் தனது தேர்தல் வாக்குறுதியாக சொல்லும் அளவிற்கு வலிமை பட அப்டேட் வெளியாகுமா என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் எப்போது ஒலித்துக் கொண்டே இருந்தது.

விஜய் பட டைட்டிலை உடனே அறிவித்த படக்குழு

விஜய் பட டைட்டிலை உடனே அறிவித்த படக்குழு

எந்த ஒரு பிரச்சனை என்றாலும் வலிமை பட அப்டேட் எப்போது? என கேட்பது வாடிக்கையாக இருந்தது. துபாயில் நடந்த கிரிக்கெட் மேட்சில் வலிமை பட அப்டேட் எப்போது என ஒரு ரசிகர் பதாகையை பிடித்து நின்றார். பெரிய அளவில் இந்த கேள்வி ட்ரெண்ட் ஆகி வந்த நிலையில் வலிமை படம் சம்பந்தமான அப்டேட் வெளியாகி படமும் வெளியானது தனிக்கதை. இது போன்று வேறு எந்த படமும் ரசிகர்களை காக்க வைக்கவில்லை என்று சொல்லலாம். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கிற வாரிசு படத்தின் பட டைட்டிலை கூட உடனடியாக வெளியிட்டு விட்டனர்.

ஏ.கே.61 பட டைட்டில் அறிவிப்பு

ஏ.கே.61 பட டைட்டில் அறிவிப்பு

ஆனால் ஏகே 61 டைட்டிலை வெளியிடாமல் நாட்கடத்தி வந்தனர். நடிகர் அஜித் ஏகே 61 படத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டாலும், அவர் தன்னுடைய புகழ்பெற்ற பிஎம்டபிள்யூ மோட்டார் பைக்கில் இமயமலையில் கடினமான, அபாயகரமான சாலையில் தனது குழுவோடு பயணம் செய்து கொண்டிருக்கிறார். பயணம் செய்து கொண்டே எப்படி படத்தில் நடிக்கிறார் என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் வைக்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க நடிகர் அஜித்தின் ஏகே 67 டைட்டில் இன்று வெளியாகும் என்று நேற்றிலிருந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

துணிவே துணை..துணை இல்லாமல் ‘துணிவு ‘ ஆனது

துணிவே துணை..துணை இல்லாமல் ‘துணிவு ‘ ஆனது

படத்தின் தலைப்பு இதுதானா என்று ‘துணிவே துணை’ என்ற பெயரை குறிப்பிட்டு அனைவரும் ட்வீட் செய்து இருந்தனர். துணிவே துணை படம் 1976 ஆம் ஆண்டு நடிகர் ஜெய்சங்கர் நடிப்பில் வெளிவந்த ஒரு படமாகும். ஜாங்கோ டைப் கதை. சவப்பெட்டியையெல்லாம் இழுத்துகிட்டு ஜெய்ஷங்கர் நடப்பார். அந்தப் படத்தின் தலைப்பை இதற்கு வைக்க போகிறார்களா? என்று பலரும் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் பட டைட்டில் வெளியாகும் பொழுது ‘துணிவு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் தனது வழக்கமான பாணியை காட்டியுள்ளார் அஜித் எனலாம்.

வீரம்-வேதாளம்-விஸ்வாசம்-விவேகம்-வலிமை

வீரம்-வேதாளம்-விஸ்வாசம்-விவேகம்-வலிமை

எப்படி என்றால் சில ஆண்டுகளாக அவர் தலைப்புகளை பார்த்தால் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டதாகவே இருக்கும். வீரம்-வேதாளம்- விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை-வலிமை-துணிவு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து எழுதினாலும் ஒரு வார்த்தை போலவே வரும். அனைத்தும் பணம் சம்பந்தப்பட்ட உளவியல் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் ஆகும் அழகாக மாலை போல் கட்டி குறிப்பிட வேண்டிய படம் போல் தலைப்பு உள்ளது

மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய எச்.வினோத்

மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய எச்.வினோத்

சமீப ஆண்டுகளாக நடிகர் அஜித்தின் படங்களில் கடைபிடிக்கப்படும் சென்டிமென்ட் மிஸ் ஆகி உள்ளது. அது என்னவென்றால் அவருடைய பட அறிவிப்புகள் வழக்கமாக வியாழக்கிழமைகளில் வெளியாகும். அதேபோல் சமீப ஆண்டு காலமாக அவருடைய படங்களின் பெயர்கள் அனைத்தும் ஆங்கில எழுத்து ‘V’-ல் தொடங்கும் வகையில் வீரம், விவேகம், விசுவாசம், வலிமை என்று இருந்தது தற்போது வந்த நுழையும் மாற்றப்பட்டு துணிவு என்று வி இல்லாமல் தலைப்பு வந்துள்ளது. இது முதல் முறை அல்ல இதற்கு முன் இயக்குனர் H.வினோத் அவர் எடுத்த நேர்கொண்ட பார்வை படத்திலும் ‘V’ சென்டிமென்ட் இல்லாமல் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் வந்தது.

'V' சென்டிமென்ட்டை மாற்றிய எச்.வினோத் துணிவு

‘V’ சென்டிமென்ட்டை மாற்றிய எச்.வினோத் துணிவு

அதன் பின்னர் அவர் அடுத்து அஜித்தை வைத்து எடுத்த படத்தில் மீண்டும் ‘V’ சென்டிமென்ட்டில் மாட்டிக் கொண்டு வலிமை என்கிற பெயரில் படம் கொண்டு வந்தார். இம்முறையும் அதேபோன்று ‘V’ சென்டிமென்ட்-ல் படம் அமையும் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் தன்னுடைய பழைய ஃபார்முக்கு திரும்பும் வகையில் ‘துணிவு’ என்ற பெயரை எச்.வினோத் கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் வழக்கமாக அஜித் படத்தில் வரும் வியாழக்கிழமை சென்டிமென்ட், ‘V’ சென்டிமென்ட் இல்லாமல் புதன்கிழமை, துணிவு என்ற பெயரில் படம் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.