நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் திடீர் ரெய்டு..பின்னணி என்ன?

சென்னை : நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் வணிகவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

நடிகர் சூரி மதுரையில் பல இடங்களில் ஓட்டல்கள் நடத்தி வருகிறார். அம்மன் ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் சைவ உணவகமும், அய்யன் ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் அசைவ உணவகமும் நடத்தி வருகிறார்.

இந்த ஓட்டலில் அனைத்து வெரைட்டி ரைஸ்களும் தரமானதாகவும், விலையும் குறைந்து இருந்தால், ஓட்டலுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்தது. இந்த உணவகங்களை சூரியின் தம்பி கவனித்து வருகிறார்.

நடிகர் சூரி

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் இல்லாத குறையை நிவர்த்தி செய்து அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்கவைத்து வருகிறார் நடிகர் சூர். இவரின் உடல்மொழியும், மதுரை மண்வாசனை வீசும் பேச்சும் அனைவருக்கும் பிடித்துப்போனது. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில், அசால்டாக பரோட்டா சாப்பிட்ட சூரி, அன்றிலிருந்தே பரோட்டா சூரியானார்.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

சிவகார்த்திகேயன் சூரியின் காமெடி காம்போ செம ஹிட் அடிக்கவே ஜெயம்ரவி, சூர்யா,விஜய்சேதுபதி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகராகவே மாறிவிட்டார். அதுமட்டும் இல்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்பத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

குறைந்த விலையில் உணவு

குறைந்த விலையில் உணவு

நடிகர் சூரி 2017ம் ஆண்டு அம்மன் உயர்தர சைவ உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை தொடங்கினார். தயிர் சாதம், நெய் சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் என அனைத்து வெரைட்டி ரைஸ்களும் குறைந்த விலையில் கொடுக்கப்பட்டதால் மக்களிடம் இந்த ஓட்டல் நல்ல பெயர் எடுத்தது. இதையடுத்து, அரசு மருத்துவமனை, ரிசர்வ் லைன், ஊமச்சிகுளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன் என்ற பெயரில் சொந்தமாக உணவகங்கள் நடத்தி வருகிறார்.

திடீர் ரெய்டு

திடீர் ரெய்டு

இந்நிலையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் வணிகவரித்துறையினர் நடத்திய சோதனையில், ஜிஎஸ்டி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூல் என புகார் எழுந்த நிலையில் சோதனை நடைபெற்றது. இதுகுறித்து 15 நாளில் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மதுரை மண்டல வணிக வரித் துறைஉத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.