அதிகப்படியான பணவீக்கம், நிதி நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாடு எனத் திரும்பும் இடமெல்லாம் பிரச்சனைகள் உடன் இருக்கும் பாகிஸ்தான் நாட்டிற்குச் சமீபத்தில் கடன் உதவி கிடைத்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு தனது வருமானத்தை அதிகரிக்கக் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் பாகிஸ்தான் அரசு பெட்ரோல் விலையை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே பல பிரச்சனைகளுக்கு மத்தியில் போராடும் பாகிஸ்தான் மக்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
விப்ரோ அதிரடி.. 300 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. காரணம் Moonlighting..!!
பாகிஸ்தான்
பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அரசாங்கம் புதன்கிழமை பெட்ரோல் ரீடைல் விற்பனை விலையை லிட்டருக்கு 1.45 ரூபாய் உயர்த்தியது. இதன் மூலம் அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 235.98 ரூபாயில் இருந்து 237.43 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்தியா
சர்வதேச நாணய சந்தை படி இந்தியாவின் ஒரு ரூபாய்-க்கு இணையாக பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பு 3.02 ரூபாய் ஆகும். அப்படிப் பார்க்கும் போது பாகிஸ்தானில் அந்நாட்டு நாணயத்தின் படி 237.43 ரூபாய் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 78.75 ரூபாயாகும்.
இப்படி இருக்கும் போது டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96.72 ரூபாய், சென்னையில் 102.63 ரூபாய்.
123 நாட்கள்
இந்தியாவில் சுமார் 123 நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் சந்தித்த போதிலும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அரசு பதில்
இந்திய மக்கள் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் குறைந்துள்ளதால் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிலையில் மத்திய அரசு சார்பில் இன்னும் பேரிட்டி அளவை அடையவில்லை எனத் தெரிவித்துள்ளது.
டீசல், மண்ணெண்ணெய் விலை சரிவு
இதேவேளையில் பாகிஸ்தான் நாட்டில் டீசல் விலை லிட்டருக்கு 4.26 ரூபாயும், மண்ணெண்ணெய் விலை 8.30 ரூபாயும் குறைந்துள்ளதாகச் செப்டம்பர் 31 ஆம் தேதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் அரசு விளக்கம்
இதன் மூலம் பாகிஸ்தான் நாட்டில் பெட்ரோல் ஒரு லிட்டர் 237.43 ரூபாய், டீசல் 247.43 ரூபாய், மண்ணெண்ணெய் 202.02 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று அறிவிக்கப்பட்டு உள்ள விலை உயர்வு சர்வதேச சந்தையில் ஏற்பட்டு உள்ள விலை மாற்றம் மற்றும் நாணய பரிமாற்றத்தில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தின் மூலம் செய்யப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
அதானி எடுத்த முக்கிய முடிவு.. அரண்டு போயுள்ள சிமெண்ட் நிறுவனங்கள்.. இது வேற லெவல் திட்டம்!
Pakistan Petrol prices raise nearly 240 per litre; check in Indian currency
Pakistan Petrol prices raise nearly ₹240 per litre; check Pakistan Petrol prices in Indian currency; Fuel is cheaper in pakistan than in india