லண்டன்: பிரிட்டனின் வெஸ்ட் மிட்லாண்ட்டில் உள்ள ஸ்மெத்விக் நகரில் இருக்கும் துர்கா கோயிலை 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள்.
துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர், ரசிகர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது. இதனால், லீசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஹிந்து கோவிலில் காவிக்கொடி கிழிக்கப்பட்டதால் வன்முறை ஏற்பட்டது. இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஸ்மெத்விக் நகரில் அமைந்துள்ள துர்கா கோவிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வரும்படி சமூக வலைதளம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியாவை சேர்ந்த பெண் துறவி சாத்வி ரிதம்பரா, அங்கு வருவதாக இருந்தது. ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது. சாத்வி ரிதம்பரா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனால், 200க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அல்லாஹூ அக்பர்’ என கோஷம் போட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். கோவிலுக்குள் பாட்டீல்கள் வீசப்பட்டன.
பட்டாசுகளை வெடிக்க செய்து, கோவிலுக்குள் வீசியவர்கள், கோவில் நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. அப்போது, சிலர் கோவில் சுவர் மீது ஏற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement