முதல் முறையாக 59 ஸ்டார்ட் அப்களில் 100 நிறுவனர்கள் ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா ரிச் லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 5.06 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனர்களில் 65 பேர் 37 யூனிகார்ன்களை சேர்ந்தவர்கள்.
இந்த நிறுவனர்களின் சராசரி வயது 40 ஆகும். இதன் காரணமாக அதிகளவிலான இளம் தொழிலதிபர்கள் ஐஐஎஃப்எல் ஹுருன் லிஸ்டில் சேர்ந்துள்ளனர்.
தடைகளை உடைத்து ஸ்டார்ட் அப் துறையில் முன்னேறிய 3 பெண் தொழிலதிபர்கள்!
பைஜூ ரவீந்தர் உட்பட
இதில் நய்காவின் பல்குனி நாயர் தவிர, இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற முக்கிய நிறுவனர்கள் பைஜு ரவீந்தரின் சொத்து மதிப்பு 30,600 கோடி ரூபாயாகும். இதே ஜெரோதாவின் நிதின் காமத் 24,200 கோடி ரூபாய், நிகில் காமத் 17,500 கோடி ரூபாயாகவும், இன்ஃபோஎட்ஜின் சஞ்சீவின் பிக்சந்தனி சொத்து மதிப்பு 19,600 கோடி ரூபாயாகும்.
கிரெடிட் குனால் ஷா
கிரெடிட் குனால் ஷா 15,000 கோடி ரூபாயாகும், இதே அப்கிரேடின் சொத்து மதிப்பு ரோனி ஸ்க்ரூவாலா 12,800 கோடி ரூபாயாகும். இதே ஓலாவின் பாவிஷ் அகர்வால் சொத்து மதிப்பு 11,700 கோடி ரூபாயாகும், எருடிடஸ் எஜூகேஷனின் அஷ்வினின் டமேராவின் சொத்து மதிப்பு 11,200 கோடி ரூபாயாகும்.
இனியும் அதிகரிக்கலாம்
ஜீட்டாவின் திவ்யாங்க் துராக்கியாவின் சொத்து மதிப்பு 11,200 கோடி ரூபாயாகும். பாவின் துரோக்கியாவின் சொத்து மதிப்பு 10,800 கோடி ரூபாயாகும்.
தொடர்ந்து இந்திய ஸ்டார்ட் அப் தலைவர்களின் இந்த ஸ்டார்ட் அப் சொத்து மதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளிப்கார்ட்
இவர்களில் பிளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் முதல் 200 இடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு 8400 கோடி ரூபாய் மற்றும் 8,100 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
நிதி துறைகள்
எனினும் இந்த ஆண்டில் கிரெட், அப் ஸ்டாக்ஸ் மற்றும் ஒன் கார்டு ஆகியவை இந்த ஆண்டு புதியதாக இந்த பணக்காரர்கள் பட்டியலில் நுழைந்தனர்.
வளர்ந்து வரும் இந்திய சந்தையில் யுபிஐ, நல்ல சந்தையை கொண்டுள்ளது. 2020-க்கு பிறகு 80 மில்லியன் இந்தியர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இறங்கியுள்ளனர். எனினும் 190 மில்லியன் பேர் இன்னும் வங்கியில்லாமல் உள்ளனர். இது எதிர்காலத்தில் செல்வத்தை ஈட்டுவதற்கு மிகப்பெரிய சந்தையாகவும் உள்ளதாக ஹுருன் இந்தியா தெரிவித்துள்ளது.
Top Leaders of Indian startups in IIFL hurun rich list
Top Leaders of Indian startups in IIFL hurun rich list/பைஜூ ரவீந்தரன், நிதின் காமத், குனால் ஷா.. மாஸ் காட்டும் ஸ்டார்ட் அப் யூத் தலைவர்கள்..!