’பொன்னியின் செல்வன்’ அருள்மொழிவர்மன் ரோலுக்கு எம்ஜிஆர் டிக் செய்த நடிகர்..கார்தி சொன்ன சுவாரஸ்ய கதை

பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அதுகுறித்து பல சுவாரஸ்ய கதைகள் வெளியாகி வருகிறது. அதில் பல இன்றைய தலைமுறையினர் அறியாத ஒன்று.

வேறு எந்த படத்திற்கும் இல்லாத சிறப்பு இந்த படத்துக்கு உண்டு. இந்தப்படத்தின் கதா பாத்திறங்களில் நடிக்க பல மெகா ஸ்டார்கள் விரும்பியுள்ளனர்.

எம்ஜிஆர், கமல், ரஜினி என மெகா ஸ்டார்களே ஆசைப்பட்ட படத்தின் கேரக்டர்கள் பற்றி கதை கதையாக விஷயம் வெளியே வருகிறது.

பாராட்டு-விமர்சனம் படம் வரும் முன் சந்திக்கும் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில் படம் பற்றி பல தகவல்களை படத்தில் நடித்தவர்கள் வெளியிடுகின்றனர். இந்தப்படம் வெளியாகும் முன் சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளது. அதில் ஒன்று வைரமுத்துவை பயன்படுத்தாதது, அதுகுறித்து மணி ரத்னம் அளித்த பதில், அதற்கு சீனு ராமசாமி போன்றோர் ரியாக்‌ஷன் என களைகட்டுகிறது. மறுபுறம் இந்தப்படத்தின் நாயகர்கள் தங்கள் வேஷத்தின் பெயரில் ட்விட்டர் கணக்கை மாற்றி அந்த பாத்திரமாகவே மாறி பதிவு செய்தத்தும் நெட்டிசன்களால் கிண்டலடிக்கப்பட்டது.

எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜய் அடடா ஒரு ரோலுக்குத்தான் எத்தனை போட்டி

எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜய் அடடா ஒரு ரோலுக்குத்தான் எத்தனை போட்டி

மறுபுறம் படத்தின் ஆடியோ ரிலீஸில் பேசிய ரஜினிகாந்த் தனக்கு சிறிய வேடம் கிடைத்தாலும் நடிக்க ஆசை என சொன்னார். பொன்னியின் செல்வன் படத்தை இதற்கு முன் எம்ஜிஆர் தான் 70 ஆண்டுகளுக்கு முன்னரே பணம் கொடுத்து ரைட்ஸ் வாங்கி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் ஆசைப்பட்ட ரோல் வந்திய தேவன் ரோல். அடுத்து கமல்ஹாசன் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க 30 ஆண்டுகளுக்கு முன் முயற்சி செய்தார். அவரும் வந்திய தேவன் ரோலில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் சிவாஜி கணேசனிடம் யோசனை கேட்டபோது ரஜினிகாந்தை போடு என்று சொன்னதாக சொன்னார்.

விஜய், மகேஷ் பாபுவுக்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லையே

விஜய், மகேஷ் பாபுவுக்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லையே

அதேபோல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் ரஜினியை வந்திய தேவனுக்கு ஏற்ற சாய்ஸ் என்று சொல்லியுள்ளார். விஜய் வந்திய தேவனாகவும், மகேஷ்பாபு அருள் மொழிவர்மனாகவும் நடிக்க போட்டோஷூட் நடத்தப்பட்டதாக சொல்வார்கள். நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு முன் பாலிவுட் நடிகை ரேகாவை யோசித்ததாக மணி ரத்னம் கூறியிருந்தார்.இப்படி படம் வரும் முன்னரே நடிகர்கள் யார் யாரெல்லாம் இதில் நடிக்க இருந்தார்கள் இப்போது அதில் கார்த்தி நடிக்கிறார் என்கிற ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளார்கள். இந்நிலையில் நடிகர் கார்த்தி சுவாரஸ்யமான புது தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

கார்த்தி சொன்ன சுவாரஸ்ய தகவல்

கார்த்தி சொன்ன சுவாரஸ்ய தகவல்

தனியார் யூடியூப் சானல் ஒன்றுக்கு பேட்டி அளித்த கார்த்தி சுவையான நிகழ்வு ஒன்றை சொல்லியிருக்கிறார். பொன்னியின் செல்வனை ” தனது தந்தை பல்வேறு நூல்களை படித்திருந்தாலும் கல்கியின் பொன்னியின் செல்வன் நூலை மட்டும் படிக்கவில்லை. ராமாயணம், மகாபாரதம் பற்றியெல்லாம் பேசுவார். ஆனால் பொன்னியின் செல்வன் குறித்து பேசியதில்லை. எனக்கு அது ஆச்சரியம்தான், சாண்டில்யன் கதைகள் எல்லாம் படித்தவர் பொன்னியின் செல்வன் படிக்காமல் இருந்தது ஆச்சரியம்தான்” என்றார்.

பொன்னியின் செல்வனில் சிவகுமாரை நடிக்க வைக்க ஆசைப்பட்ட எம்ஜிஆர்

பொன்னியின் செல்வனில் சிவகுமாரை நடிக்க வைக்க ஆசைப்பட்ட எம்ஜிஆர்

அப்போது தனது தந்தை சொன்ன ஒரு தகவலைச் சொன்னார், “அப்பாவின் 100-வது படவிழாவில் (ரோசாப்பூ ரவிக்கைக்காரி) பேசிய அன்றைய முதல்வர் எம்ஜிஆர், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க விருப்பப் பட்டதாகவும், அதில் அருண்மொழி வர்மன் கேரக்டரை அப்பா (சிவகுமார்) பண்ணவேண்டும் என்று ஆசைப்பட்டதாக பேசியதாக அப்பா சொல்லியிருந்தார். இப்போது நான் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடிப்பதால் அப்பா பொன்னியின் செல்வன் ஆடியோ புக்ஸ் கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்ப அருள் மொழி வர்மன் ஜெயம்ரவி சரியான தேர்வு” என்று கூறினார். உடனிருந்த பார்த்திபன் “அந்த காலத்தில் இளவரசர், முருகன், கண்ணன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சிவகுமார் சார்தானே” என்றார்.

அருள் மொழி வர்மன் வேடத்துக்கு கூட ஏற்கெனவே நடிக்க ஆள் இருந்திருக்கே

அருள் மொழி வர்மன் வேடத்துக்கு கூட ஏற்கெனவே நடிக்க ஆள் இருந்திருக்கே

எம்ஜிஆர், கமல், ரஜினி, விஜய் என பலரும் வந்திய தேவன் பாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட அல்லது பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதில் கார்த்தி நடிக்க வாய்ப்பு கிடைத்தது அவரது கலைவாழ்க்கையில் சிறப்பான ஒன்று. அதே நேரம் அருள் மொழி வர்மன் பாத்திரம் பற்றி தற்போதுதான் தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் எம்ஜிஆரே நடிகர் கார்த்தியின் தந்தை சிவகுமாரை நடிக்க வைக்க ஆசைப்பட்டதாக பேசிய தகவல் புது தகவல்தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.