பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணையின் 3 மதகுகளில் ஒரு மதகு உடைந்துள்ளது. மதகு உடைந்துள்ளதால் அணையில் இருந்து ஏராளமான தண்ணீர் வெளியேறி வருகிறது பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட பொறியாளர்கள் மதகை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ஒரு மதகு உடைந்துள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி மற்ற மதகுகளில் வினாடிக்கு 10, 000 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.
