ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செய்து வந்த வர்த்தகத் துறையில் இன்று, ஆண்களுக்கு இணையாக, ஏன் பல நேரத்தில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பல வர்த்தகச் சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவில் ஆன்லைன் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் தளமான நைகா நிறுவனத்தின் வெற்றியை தொடர்ந்து இவரது சொத்து மதிப்பு தாறுமாறாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், கடந்த ஒரு வருடத்தில் சொத்து மதிப்பில் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்த இந்தியர்கள் பட்டியில் பால்குனி நாயர் 5வது இடத்தையும், பெண்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்தில் பால்குனி நாயர் சொத்து மதிப்பு எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது தெரியுமா..?
யுபிஐ உடன் இணைக்கப்படும் ரூபே கிரெடிட் கார்டு.. 3 வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
IIFL Wealth அறிக்கை
இன்று வெளியாகியுள்ள IIFL Wealth Hurun India Rich List 2022 தரவுகள் படி இந்தியாவின் பணக்கார பெண் தெழிலதிபராகப் பால்குனி நாயர் உயர்ந்துள்ளார். இதன் மூலம் முதல் இதுவரை முதலிடத்தில் இருந்த பயோகான் முசம்தர்ஷா 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
பால்குனி நாயர்
மேலும் பால்குனி நாயர்-ஐ தொடர்ந்து ரேர் எண்டர்பிரைஸ் நிறுவனர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மறைவுக்குப் பிறகு இவருடைய மொத்த சொத்துக்களும் அவருடைய மனைவி ரேகா ஜூன்ஜூன்வாலா-வுக்கு வந்த நிலையில் 2வது பணக்கார பெண்னணாக உயர்ந்துள்ளார்.
345 சதவீதம் உயர்வு
பால்குனி நாயர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 345 சதவீதம் உயர்ந்து 30000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மொத்த சொத்து மதிப்பு 38,700 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இது அனைத்துமே சொந்த உழைப்பில் பால்குனி நாயர் சாதித்துள்ளார்.
ரவி மோடி
இதேபோல் மன்யவார் ஆடம்பர ஆடை பிராண்டி தாய் நிறுவனமான வேதாந் பேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரவி மோடி குடும்பத்தின் சொத்து மதிப்பு 376 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
Nykaa Falguni Nayar wealth grows by 345 percent
Nykaa Falguni Nayar wealth grows by 345 percent in last one year