டெல்லி: மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழர்கள் உட்பட 350 இந்தியர்களை மீட்க மியான்மரில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
