முஸ்லிம் தாடியை இழுத்து மழித்த ஜெயிலர்.. பாகிஸ்தானியா.. ஜெயிலுக்குள் என்னதான் நடந்தது? பறந்த உத்தரவு

போபால்: ஜெயிலில் இஸ்லாமிய கைதிகளின் தாடியை கட்டாயப்படுத்தி மழிக்க செய்த விவகாரத்தில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீப காலமாகவே இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருவதாகவும், குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்தபிறகே இத்தகைய நடவடிக்கைகள் பெருகி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் பரவலாக கூறப்பட்டு வருகின்றன.

சில வருடங்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவம் இது.. முடிதிருத்தும் நிலையங்களை வைத்துள்ளவர்கள் தமது கடைகளுக்கு வரும் இஸ்லாமியர்கள் தாடியை மழிக்கச் சொன்னால் அதைச் செய்யலாமா? இஸ்லாமியர்கள் தாடியை மழிக்கலாமா? என்பது குறித்து விளக்க வேண்டும் என்று உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 முஸ்லிம் நாவிதர்கள், அந்த மதப் பள்ளியின் அறிஞர்களிடம் கேட்டுள்ளனர்.

சஸ்பெண்ட்

இது ஒரு விவாத பொருளாகவே அப்போது மாறியது.. அதுபோலவே, இதே உத்தரபிரதேசத்தில் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்த சார்அலி என்ற சப் இன்ஸ்பெக்டர், நீளமாக தாடி வைத்திருந்தார் என்ற காரணத்துக்காகவே, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.. தாடி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு பலமுறை லெட்டர் அனுப்பியும் பதில் சொல்லாத காவல்துறை மேலிடம், என்னை பதவியில் இருந்து நீக்கிவிட்டது என்று சார் அலி அப்போது புலம்பியும் இருந்தார்.

விஸ்வரூபம்

விஸ்வரூபம்

இப்படி இஸ்லாமியர்களின் தாடி விவகாரங்கள், பிரச்சனையாக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய பிரதேசத்தில் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.. மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளின் தாடியை கட்டாயப்படுத்தி மழித்து கொடுமை நடந்ததாக புகார் கிளம்பி உள்ளது.. இந்த புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்தவும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது… போபால் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆரிப் மசூத், இதுதொடர்பாக சிறையின் ஜெயிலர் என்எஸ் ராணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

 பாகிஸ்தானியா?

பாகிஸ்தானியா?

8 வருடமாக தாடி வைத்திருக்கிறேன்.. இப்படி கட்டாயப்படுத்தி மழித்தது, எங்கள் மத உணர்வுகளை புண்படுத்தும்வகையில் இருந்தது என்றார்.. இந்த குற்றச்சாட்டு மாநிலம் முழுவதும் எதிரொலித்து வெடித்தது.. இதையடுத்து, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.. அதில், “ஒருவர் தாடி வைத்திருந்தால், அவர் பாகிஸ்தானை சேர்ந்தவரா? முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அந்த ஜெயலரின் செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போகிறாரா அல்லது விருது வழங்க போகிறாரா? என்று காட்டமாக கேட்டிருந்தார்.

மழியுங்கள்

மழியுங்கள்

ஆனால் இந்த குற்றச்சாட்டை ஜெயலர் ராணா மறுத்துள்ளார்.. “கைதிகளிடம் நான் பேசவேயில்லை.. தாடியை மழியுங்கள் என்றும் சொல்லவேயில்லை.. ஜெயிலில் இருந்து வெளியே போனதுமே அவர்கள் தாடியை மழித்துள்ளார்கள்.. ஏன் மழித்தார்கள் என்றும் எனக்கு தெரியாது. ஆனால் ஜெயிலில் அப்படி எதுவுமே நடக்கவில்லை” என்றார். இந்நிலையில், போபால் காங்கிரஸ் எம்எல்ஏ ஆரிப் மசூத், ஜெயிலர் ராணாவுக்கு எதிராக அரசு முதல் தகவல் அறி்க்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதையடுத்து, முஸ்லிம் கைதிகளை சிறையில் தாடியை மழித்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உறுதியளித்துள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.