கொரோனா தொற்றுப் பாதிப்புகள் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் தணித்துள்ள காரணத்தால் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குப் பணியாற்றிய ஊழியர்கள் இந்திய வர துவங்கியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது அனைத்து நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரும் நிலையில் உலகளாவிய நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் தூதரகப் பணியாளர்கள் முழுநேர அலுவலகப் பணிகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதனால் பெரு நகரங்களில் ஆடம்பர வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
ஒரு இரவுக்கு ரூ.40,000 .. விண்ணை முட்டிய பெங்களூரு லாட்ஜ் வாடகை.. என்ன காரணம் தெரியுமா..?
உயர் அதிகாரிகள்
MNC நிர்வாகிகள் மற்றும் தூதரகப் பணியாளர்களின் குடும்பத்தினர் கொரோனா காரணமாக அவர் அவர் சொந்த ஊரில் இருந்த நிலையில் தற்போது இந்தியாவிற்குத் திரும்பியுள்ளனர். இதனால் ஆடம்பர வீடுகள், பென்ட்ஹவுஸ் அல்லது பண்ணை வீடுகளுக்கான தேவை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
வாடகை வீடு
கொரோனா காலத்தில் வாடகை வீட்டில் இருந்து மாத மாதம் வாடகை வந்தாலே பெரிய விஷயமா இருந்த நிலையில் தற்போது டிமாண்ட் அதிகரித்துள்ளதால் நாட்டில் சில பகுதிகளில் ஆடம்பர வீடுகளுக்கான வாடகை 60 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
மும்பை டூ சென்னை
நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் மேற்கு புறநகர் மற்றும் மத்திய மற்றும் தெற்கு மும்பை பகுதிகள், என்சிஆர் பகுதியில் கோல்ஃப் கோர்ஸ் சாலை மற்றும் தெற்கு டெல்லி; பெங்களூரில் ஜே.பி.நகர், ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் காலியாக இருக்கும் வீடுகளே இல்லாத நிலை மட்டும் அல்லாமல் சராசரி மாத வாடகை பெரிய அளவில் அதிகரித்துள்ளன.
60 சதவீதம் உயர்வு
சாவில்ஸ் நிறுவனத்தின் ஆய்வுகள் படி டெல்லியின் தென்-மத்திய பகுதியில் 2022 நிதியாண்டின் முதல் பாதியில் வாடகை அளவு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 60 சதவீதம் உயர்ந்துள்ளது.
பெரும் பணக்காரர்கள்
இந்தியாவில் தற்போது பெரும் பணக்காரர்களில் (HNI) பெரும்பகுதி இப்போது தங்களுடைய சொந்த உபயோகத்திற்காக அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதை விட, வாடகைக்கு விடுவதையே விரும்புகின்றனர். காரணம் அதிகப்படியான வருமானம் என்பதால் மட்டுமே.
ரியல் எஸ்டேட்
2021 துவக்கம் முதல் இந்தியாவில் ஆடம்பர வீடுகளுக்கான டிமாண்ட் மற்றும் விற்பனை அதிகளவில் இருந்தது, இதன் வெளிப்பாடு தற்போது தெரிகிறது. முதலீட்டுச் சந்தையில் ஒரு கூட்டம் ரியல் எஸ்டேட் தேவையில்லாத முதலீடு எனக் கூறி வரும் நிலையில் இந்தச் செய்து அதை முற்றிலும் பொய்யாக்கியுள்ளது.
Rental luxury homes demand zooms; Rent increased upto 60 percent in chennai, mumbai, bengaluru
Rental luxury homes demand zooms; Rent increased upto 60 percent in chennai, mumbai, bengaluru