வாத்திய கலைஞர்களுடன் செண்டை மேளத்தை இசைத்த விக்ரம்.. சார் இதுகூட தெரியுமா உங்களுக்கு!

திருவனந்தபுரம் : கல்கியின் சிறப்பான கலைப்படைப்பான பொன்னியின் செல்வன் படம் திரைவடிவம் பெற்றுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு சிறப்பாக உள்ள நிலையில் பிரமோஷனையும் மிகவும் சிறப்பான வகையில் படக்குழுவினர் செய்து வருகின்றனர்.

கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி என முன்னணி நடிகர்கள் பிரமோஷனல் டூரில் ஈடுபட்டுள்ளனர்.

அமரர் கல்கி

அமரர் கல்கியின் சிறப்பான படைப்புகளில் ஒன்றாக அமைந்துள்ள நாவல் பொன்னியின் செல்வன். இன்னும் சொல்லப்போனால், அவருடைய பெஸ்ட் என்றும் இந்த நாவலை கூறலாம். இந்த நாவல் அனைவருக்குமே கனவுதான். பள்ளிகளில் தூக்கங்களுக்கு மத்தியில் படித்த வரலாறுகளை காவியங்களாக்கிய பெருமை கல்கியை மட்டுமே சேரும்.

பொன்னியின் செல்வன் படைப்பு

பொன்னியின் செல்வன் படைப்பு

அவரது நடைக்கு அந்த காலகட்டங்களில் மட்டுமில்லாமல் இந்த காலகட்டங்களிலும் ரசிகர்கள் காணப்படுவது அவரது சிறப்பு. அந்தவகையில் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாகவே எம்ஜிஆர், கமல் முதல்கொண்டு இந்தப் படைப்பை திரையில் கொண்டுவர முயன்றனர். ஆனால் தற்போது மணிரத்னத்திற்கு இது சாத்தியப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட படைப்பு

பிரம்மாண்ட படைப்பு

மணிரத்னத்திற்கும் மூன்றாவது முயற்சியிலேயே இந்த கனவு சாத்தியமாகியுள்ளது. சிறப்பான கேரக்டர் தேர்வு உள்ளிட்டவற்றால் இந்தப் படைப்பை காவியமாக்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளன.

படத்தை அழகாக்கிய ஏஆர் ரஹ்மான்

படத்தை அழகாக்கிய ஏஆர் ரஹ்மான்

ஏஆர் ரஹ்மானும் தன்னுடைய பங்கிற்கு இந்தப் படத்தை மேலும் அழகாக்கியுள்ளார். அவரது இசையில் பழங்கால இசைக் கோர்ப்புகளும் இணைந்த நிலையில், 6 பாடல்களை முத்தாக கொடுத்துள்ளார் இசைப்புயல். அவரது முயற்சிக்கு தற்போது வெற்றி கிட்டியுள்ளது. இதுவரை லிரிக் வீடியோவாக வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.

9 நாட்களில் ரிலீஸ்

9 நாட்களில் ரிலீஸ்

இன்னும் 9 நாட்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு மிகவும் பிரம்மாண்டமான பிரமோஷன்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக டீசர், பாடல்கள் என சென்னை, ஐதராபாத்தில் அடுத்தடுத்து பிரம்மாண்டமாக வெளியானது.

கேரளாவில் பிரமோஷன்ஸ்

கேரளாவில் பிரமோஷன்ஸ்

தொடர்ந்து படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் மிரட்டியது. இந்நிலையில் படக்குழுவினர் தற்போது பிரமோஷனல் டூரில் இணைந்துள்ளனர். இயக்குநர் மணிரத்னம்தான் இந்த டூரின் பாஸ். சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு தங்களின் பிரமோஷனல் டூரை துவக்கிய இந்த டீம், தற்போது கேரளாவில் முகாமிட்டுள்ளது.

செண்டை மேளத்தை இசைத்த விக்ரம்

செண்டை மேளத்தை இசைத்த விக்ரம்

இந்நிலையில் நேற்றைய தினம் திருவனந்தபுரத்தில் நடந்த இந்த பிரமோஷனில், நடிகர்கள், கார்த்தி, ஜெயம் ரவி விக்ரம் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். கேரளாவின் செண்டை மேளம் முழங்க நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், அந்தக் கலைஞர்களுடன் இணைந்து தானும் செண்டை மேளத்தை இசைத்து காட்டி அசத்தினார்.

அடுத்தடுத்த இடங்களில் பிரமோஷன்

அடுத்தடுத்த இடங்களில் பிரமோஷன்

சென்னை, கேரளாவில் தங்களின் பிரமோஷனை முடித்துக் கொண்ட பொன்னியின் செல்வன் டீம், நாளைய தினம் பெங்களூருவில் முகாமிட உள்ளனர். தொடர்ந்து டெல்லி, துபாய் என அடுத்தடுத்து பிரமோஷனை நடத்தவுள்ளனர். படத்தின் ரிலீசுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் தங்களது பிரமோஷனுக்காக சமூக வலைதளங்களையும் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.