வெறும் 19 வயதில் ரூ.1200 கோடி சொத்து.. வியக்க வைக்கும் பெங்களூர் இளைஞர்கள்..!

ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா கூட்டணியில் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்பட்டு வரும் பணக்காரர்கள் பட்டியல், 2022க்கான அறிக்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 2022 பட்டியலில் 19 வயதான கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் பாலிச்சா ஆகிய இருவரும் இளம் பணக்காரர்களாக இடம்பெற்றுள்ளனர்.

WFH முடிந்தது.. டிராபிக் உச்சம்..! இயல்பு நிலைக்கு திரும்பிய பெங்களூர்..!

Zepto நிறுவனர்கள்

Zepto நிறுவனர்கள்

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் இயங்கி வரும் Zepto இணை நிறுவனர்களான கைவல்யா வோஹ்ரா, ஆதித் பாலிச்சா இந்தியாவில் இளம் வயதில் சுயமாகத் 1000 கோடி ரூபாயை சம்பாதித்து 2022 ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய இருவரும் 2021 ஆம் ஆண்டில் Zepto ஐ நிறுவினர். வெறும் 19 வயது மட்டுமே ஆன நிலையில் அவர்கள் உருவாக்கி ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை மற்றும் டெலிவரி தளமான Zepto நிறுவனத்தின் மதிப்பு 900 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

 1000 கோடி ரூபாய் சொத்து
 

1000 கோடி ரூபாய் சொத்து

Hurun இந்தியா வெளியிட்டுள்ள பட்டியலில் 90 களில் பிறந்த 13 பேர் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். டெக் மற்றும் டிஜிட்டல் வர்த்தக வளர்ச்சி மூலம் இளம் பணக்காரர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

இந்த நிலையில் கைவல்யா வோஹ்ரா-வின் சொத்து மதிப்பு சுமார் 1,000 கோடி ரூபாய் உடன் இப் பணக்காரர்கள் பட்டியலில் 1,036 வது இடத்தில் உள்ளார். இதேபோல் ஆதித் பளிச்சா 1,200 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இப்பணக்காரர்கள் பட்டியலில் 950வது இடத்தில் உள்ளார்.

 1,103 பேர்

1,103 பேர்

இந்தப் பட்டியலில் பொதுவாக 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து வைத்துள்ளவர்கள் கணக்கில் சேர்க்கப்படுவார்கள், இந்த வரையில் எப்போதும் இல்லாத வகையில் 2022 ஆம் ஆண்டுப் பட்டியலில் சுமார் 1,103 பேர் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர்.

100 லட்சம் கோடி ரூபாய்

100 லட்சம் கோடி ரூபாய்

இதேபோல் முதல் முறையாக இப்பட்டியலில் இடம்பெற்று இருவர்களின் மொத்த சொத்து மதிப்பு 100 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளின் மொத்த ஜிடிபி அளவுகளாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India’s youngest rich people 19 yr old Zepto founders Kaivalya Vohra, Aadit Palicha in Hurun list

India’s youngest rich people 19 yr old Zepto founders Kaivalya Vohra, Aadit Palicha enters in IIFL Hurun rich list 2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.