வேலையும் இல்லை, சம்பளமும் இல்லை.. வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானிகள்!

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்று ஸ்பைஸ்ஜெட் என்பதும் இந்நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளில் விமான சேவை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணி புரியும் 80 விமானிகளை திடீரென மூன்று மாத விடுமுறைக்கு அனுப்பி உள்ளது.

இந்த மூன்று மாதத்திற்கு 80 விமானிகளுக்கு வேலையும் இல்லை, சம்பளமும் இல்லை என்று கூறியிருப்பது விமானிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எப்ப சார் சம்பளம் போடுவீங்க.. ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் புலம்பல்..!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

குறைந்த கட்டணத்தில் விமான சேவை செய்து வரும் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் சுமார் 80 விமானிகளை ஊதியம் இல்லாமல் விடுப்பில் அனுப்புவதாக நேற்று அறிவித்துள்ளது. பிராந்திய வழித்தடங்களில் இயங்கும் போயிங் 737 விமானங்களை இயக்கும் சுமார் 40 விமானிகளும், Q400 வகையை சேர்ந்த விமானங்களை இயக்கும் சுமார் 40 விமானிகளும் மூன்று மாதங்களுக்கு ஊதியம் இல்லாமல் விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மீண்டும் அழைக்கப்படுவார்களா?

மீண்டும் அழைக்கப்படுவார்களா?

மூன்று மாதங்கள் சம்பளமில்லா விடுமுறை என்றாலும் வீட்டுக்கு அனுப்பப்படும் விமானிகள் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் அழைக்கப்படுவார்களா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஆனால் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதால், இந்த விமானிகள் மீண்டும் அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விமானங்கள்
 

புதிய விமானங்கள்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வரும் டிசம்பரில் ஏழு புதிய போயிங் 737 மேக்ஸை வாங்க திட்டமிட்டுள்ளது. எனவே அந்த சமயத்தில் கூடுதல் விமானிகள் தேவைப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

50 ஆக குறைந்த விமானங்கள்

50 ஆக குறைந்த விமானங்கள்

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில் சுமார் 95 விமானங்கள் இருந்தன. ஆனால் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வாடகைக்கு எடுத்த விமானங்களை திருப்பியனுப்பியதால் தற்போது குறைவாகவே விமானங்கள் உள்ளன. மேலும் சில விமானங்கள் உதிரிபாகங்கள் மற்றும் பராமரிப்புப் பிரச்சினையால் செயலிழந்துவிட்டதாகவும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் தற்போது 50 விமானங்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

செலவை குறைக்க திட்டம்

செலவை குறைக்க திட்டம்

95 விமானங்கள் இருந்தபோது அதிக விமானிகள் தேவைப்பட்டதாகவும், தற்போது 50 விமானங்கள் மட்டுமே இருப்பதால் அதிக விமானிகளை வைத்திருப்பது அர்த்தமற்றது என்றும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செலவை குறைக்கவே இந்த நடவடிக்கை என்றும், ஆனால் புதிய விமானம் வாங்கும்போது விமானிகள் திரும்ப அழைக்கப்படுவார்கள் என்றும் ஸ்பைஸ்ஜெட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SpiceJet Will Sends 80 Pilots On Leave: Without salary For three Months

SpiceJet Will Sends 80 Pilots On Leave: Without salary For three Months | வேலையும் இல்லை, சம்பளமும் இல்லை.. வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானிகள்!

Story first published: Wednesday, September 21, 2022, 6:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.