டிக்-டாக் மற்றும் மெட்டா செயலி போட்டியை சமாளிக்க ‘ஷார்ட்’ வீடியோ-க்களுக்கு 45% விளம்பர வருவாயை பகிர YouTube நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
2023 ம் ஆண்டு முதல் இதை செயல்படுத்த இருப்பதாக யூ-டியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது யூடியூபர்கள் 1,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களையும் 4,000 பார்வை மணி நேரங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் ஷார்ட் வீடியோக்களை பொறுத்தவரை குறைந்தது 1000 சப்ஸ்க்ரைபர்களை கொண்ட சேனல்களில் உள்ள குறைந்த நேர வீடியோக்களை 90 நாட்களில் 10 மில்லியன் வியூஸ்கள் கிடைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு விளம்பர வருவாய் பகிரப்படும் என்று தெரிவித்துள்ளது.
15 ஆண்டுகளுக்கும் மேலாக யூடியூப் நிறுவனம் விளம்பர வருவாயை பகிர்ந்து வந்தபோதிலும், புதிய பயனாளர்களை ஈர்ப்பதில் தற்போது கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.
ஷார்ட் வீடியோ படைப்பாளர்களுக்கு 45 சதவீத விளம்பர வருவாய் பகிரப்படும் என்று தெரிவித்துள்ள அந்நிறுவனம், ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் குறும்படங்கள் பெறும் வியூஸ்களின் அடிப்படையில் வருவாய் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.