இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வரும் நிலையில் ஆகாச நிறுவனத்தின் வருகை மேலும் மோசமாக்கியுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ஏர் இந்தியாவின் முக்கிய வர்த்தகப் பிரிவான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எப்போதும் இல்லாத வகையில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
இதற்கு டாடா குழுமம் தான் காரணமா..?
விப்ரோ அதிரடி.. 300 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. காரணம் Moonlighting..!!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரிவு என்பது ஏர் இந்தியா நிறுவனத்தில் இருக்கும் தனி வர்த்தகப் பிரிவு இப்பிரிவில் வளைகுடா நாடுகள் மட்டுமான சேவைகளை அளிக்கப்பட்டு வருகிறது. இப்பிரிவின் வர்த்தகம் மூலம் கடந்த 7 வருடத்தில் தொடர்ந்து லாபத்தை மட்டுமே சந்தித்து வந்த நிலையில் முதல் முறையாக நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
22.9 லட்சம் வாடிக்கையாளர்கள்
2022 ஆம் நிதியாண்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரிவு சேவையின் வாடிக்கையாளர் எண்ணிக்கை முந்தைய ஆண்டை காட்டிலும் 56 சதவீதம் அதிகரித்து 22.9 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்ற நிலையிலும் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
72.33 கோடி ரூபாய் நஷ்டம்
மார்ச் மாத்துடன் முடிவடைந்த 2022 நிதியாண்டில் 72.33 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ள நிலையில் 2021 ஆம் நிதியாண்டில் 98.21 கோடி ரூபாய் லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 2022 ஆம் நிதியாண்டில் 10,172 விமானப் பயணங்களை மேற்கொண்ட நிலையில் இதில் வெறும் 190 மட்டுமே உள்நாட்டுப் பயணங்கள்.
டாடா குழுமம்
இதற்கு காரணம் டாடா குழுமம் தானா என்று கேட்டால் நிச்சயம் இல்லை..! 2022 ஜனவரி 27 ஆம் தேதி தான் டாடா குழுமத்தின் டேலெஸ் நிறுவனம் மத்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா வர்த்தகத்தை மொத்தமாகக் கைப்பற்றியது. இதுவரையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் தான் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை இருந்தது.
24 737 விமானங்கள்
2022க்கு முன்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 2015ல் 61 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்தது. கொரோனா தொற்றின் 2வது மற்றும் 3வது காலாண்டில் கொரோனா தொற்றுக் காரணமாக விமானச் சேவைகள் வளர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்ட நிலையில் 24 737 விமானங்களை வைத்துள்ளது.
15 நாடுகள்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் துபாய், அபுதாபி, ஷார்ஜா, ராஸ்-அல்-கைமா, அல் ஐன், மஸ்கட், சலாலா, பஹ்ரைன், தோஹா, குவைத், தம்மாம், ரியாத், ஜித்தா, சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய 15 நாடுகளுக்கு விமானச் சேவை அளிக்கிறது.
கர்நாடக அரசு எடுத்த முக்கிய முடிவு.. மழை நீர் வடிகால் மீது கட்டப்பட்ட ஸ்லாப்களை அகற்றும் விப்ரோ..!
Air India Express Posted Loss for First Time in 7 Years; Is this happen because of TATA
Air India Express Posted Loss for First Time in 7 Years; Is this happen because of TATA