மும்பை: அமெரிக்காவின் மத்திய வங்கியானது 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வட்டி விகிதத்தினை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ரெசசனுக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் மற்ற சில நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்னும் அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைவு தான் என நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தொடர்ந்து 3வது முறையாக வட்டி விகிதமானது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா காலத்தில் இருந்த குறைந்தபட்ச அளவினை எட்டிய நிலையில், அதில் இருந்து 3% என்ற அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது.
8 ஏக்கரில் பண்ணை வீடு கட்டும் விராத் கோலி அனுஷ்கா ஷர்மா..!
அமெரிக்கா தான் டாப்
அமெரிக்கா மத்திய வங்கியின் இந்த முடிவானது இங்கிலாந்து, ஐரோப்பிய மண்டலம், தென் கொரியா, இந்தியா உள்பட மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாகும். இந்தியா இதுவரையில் 140 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே பிரேசில் 1175% வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. ரஷ்யாவிலும் 325 அடிப்படை புள்ளிகளாக அதிகரித்துள்ளது. சீனாவிலும் இன்னும் வட்டி விகிதம் என்பது குறைவாகவே உள்ளது. தென் கொரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தும் 150 அடிப்படை புள்ளிகளும், ஐரோப்பிய மண்டலம் 125 அடிப்படை புள்ளிகளும் வட்டி அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவுக்கும், பிற நாடுகளுக்குமான இடைவெளியானது உச்சத்தினை எட்டியுள்ளது.
பணவீக்கம் எங்கு அதிகம்?
வட்டி விகித அதிகரிப்பில் பிரேசில், ரஷ்யாவில் அமெரிக்காவினை விட அதிகம் என்றாலும், மற்ற நாடுகள் அமெரிக்காவினை விட பின் தங்கியுள்ளன. இதே பணவீக்கத்தில் பார்க்கும்போது ரஷ்யா, இங்கிலாந்து ஐரோப்பிய மண்டலம், பிரேசில் உச்சத்தில் உள்ளன. இதன் பிறகே அமெரிக்கா உள்ளது.
ரஷ்யா – 14.3%
இங்கிலாந்து – 9.9%
ஐரோப்பிய மண்டலம் – 9.1%
பிரேசில் – 8.7%
அமெரிக்கா – 8.3%
தென் ஆப்பிரிக்கா – 7.6%
இந்தியா – 7%
தென் கொரியா – 5.7%
பாதிப்பா?
அமெரிக்காவின் மத்திய வங்கி நடவடிக்கையால் அது இந்தியா உள்பட மற்ற நாடுகளையும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் கட்டாயம் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்படும் நடவடிக்கையாக பார்க்கப்பட்டாலும், இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறவும் வழிவகுக்கலாம்.
இந்தியாவில் என்ன பிரச்சனை?
இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்தால் அது மீண்டும் வங்கிகளை வட்டி அதிகரிப்புக்கு தூண்டலாம். இது இந்தியாவில் வீட்டுக் கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு கடன் உள்ளிட்டவற்றிற்கும் வட்டியை அதிகரிக்க தூண்டலாம். இது வளர்ச்சியில் மெதுவான வளர்ச்சியினை தூண்டலாம். அதோடு தேவையிலும் சரிவினை ஏற்படுத்தலாம். இது பங்கு சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். எனினும் அதிகளவில் முதலீடுகள் வெளியேறாமலும் தடுக்க இது வழிவகுக்கும்.
ரூபாயில் தாக்கம் இருக்கலாம்?
எப்படியிருப்பினும் தொடர்ந்து வட்டி அதிகரிப்பினை செய்து வரும் நிலையில் அமெரிக்க டாலரின் மதிப்பானது, பலத்த உச்சத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு இந்திய ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். இது ரூபாய் மதிப்பு மேற்கொண்டு சரிய வழிவகுக்கலாம்.
How will US interest rate hike impact India?
How will US interest rate hike impact India?/அமெரிக்காவுக்கும் இந்தியவுக்கும் இடையில் அதிகரித்த கேப்.. சக்திகாந்த தாஸின் முடிவு எப்படியிருக்கும்?