ஆசிரியரும், மாணவியும்தற்கொலை| Dinamalar

சஹாரன்பூர்,:உத்தர பிரதேசத்தில், பள்ளி ஆசிரியர், மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ரசுல்பூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் வீரேந்திரா, ௪௦. இவருக்கும், அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்த மாணவிக்கும் காதல் இருந்துள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவரும் செப்., ௩ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர், தங்கள் மகள் கடத்தப்பட்டதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, அந்த ஊரின் வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே, போலீசார் அங்கு சென்ற போது ஆசிரியரும், மாணவியும் மரத்தில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.