* ஆ.ராசாவை கோயில் குருக்கள் சந்தித்துள்ளனர்.
* திருக்கோவில் அர்ச்சகராக பணி நியமனம்
சில தினங்களுக்கு முன்பாக ஆ.ராசா மனுதர்மத்தில் இருப்பதை குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . அந்த நிகழ்ச்சியில் அவர்
“நீ பார்சியாக இல்லையெனில், கிறிஸ்தவனாக இல்லையெனில், இஸ்லாமியராக இல்லையெனில், நீ ஒரு இந்துவாகத்தான் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன்” என்று தொடங்கி மேலும் சில கருத்துகளைக் ஆ.ராசா கூறினார்.
இந்த சூழலில் ஆ.ராசாவின் கருத்துக்கு சில அரசியல் தலைவர்கள்
கண்டனம் தெரிவித்தனர். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் இன்று ஆ.ராசாவை கோயில் குருக்கள் சந்தித்துள்ளனர். இதனை ஆ.ராசா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பதிவிட்டுள்ள அவர்” நீலகிரி நாடளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி, காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் அர்ச்சகராக பணி நியமனம் பெற்ற
திரு.அஸ்வின் ஞான சுவாமிநாத குருக்கள் என்னிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆ.ராசா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் “ மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசுகாரன்பட்டியில் வசிக்கும் கண்ணன் என்ற நபர்,
எம்பி ஆ.ராசா இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதால் அவரது நாக்கை வெட்டி கொண்டு வந்தால் ரூ.1 கோடி பணமும், ஒரு ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என முகநூலில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.”
பரபரப்பான சூழலுக்கு மத்தியில் கோயில் குருக்கள் உடனான ஆ.ராசாவின் இந்த சந்திப்பு பெரும் பேசு பொருள் ஆகி உள்ளது .