இந்தியாவில் ஒருவர் அதிகபட்சமாக எத்தனை வங்கி கணக்கு தொடங்கலாம்?

தற்கால உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கி கணக்கு அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. நாம் சேமித்து வைத்த பணத்தை டெபாசிட் செய்வதற்கும் பணப்பரிமாற்றம் செய்வதற்கும் வங்கி கணக்கு என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

பெரும்பாலானோர் ஒரு வங்கிக்கணக்கை மட்டும் தொடங்கி பணப்பரிமாற்றம் செய்து வரும் நிலையில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பார்கள்.

இந்தியாவில் ஒருவர் அதிகபட்சமாக எத்தனை வங்கி கணக்கு வைத்திருக்கலாம்? ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் நன்மைகள் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

‘இந்த’ வங்கி மூடப்படுகிறது.. உடனே பணத்தை எடுத்திடுங்க..!

வங்கிக்கணக்கு

வங்கிக்கணக்கு

வங்கிகளில் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு கணக்கு என பல வங்கி கணக்குகளை தொடங்கும் முறை உள்ளது. தனி நபர் என்றால் சேமிப்பு கணக்கையும், நிறுவனம் என்றால் நடப்பு கணக்கையும் தொடங்கலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக்கணக்கு

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக்கணக்கு

ஒருவருக்கு ஒரு வங்கிக்கணக்கு என்பது ஓர் இன்றியமையாத ஒன்றாக இருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கும் போது சில விஷயங்களை வாடிக்கையாளர்கள் கவனித்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஊதியக்கணக்கு
 

ஊதியக்கணக்கு

பள்ளி கல்லூரி படிப்பை முடித்தவுடன் சொந்த ஊரில் பண பரிமாற்றம் செய்வதற்கு பெரும்பாலும் வங்கிக்கணக்கை தொடங்குவது உண்டு. ஆனால் அதே நேரத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகு நிறுவனத்தினர் ஊதியக்கணக்கு என்ற ஒன்றை நம்முடைய பெயரில் தொடங்குவார்கள். இந்த நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் தற்போது வைத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேவைக்கட்டணம்

சேவைக்கட்டணம்

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக்கணக்கு ஒருவகையில் நல்லதாக இருந்தாலும் சில விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். கிட்டதட்ட அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணங்களை வசூலித்து வருகின்றன என்பதும் டெபிட் கார்டு கட்டணம், எஸ்எம்எஸ் கட்டணம் என பல்வேறு கட்டணங்களை நமது வங்கிக்கணக்கில் உள்ள தொகையில் பிடித்தம் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே.

மினிமம் பேலன்ஸ்

மினிமம் பேலன்ஸ்

அதுமட்டுமின்றி பல வங்கிகள் மினிமம் பேலன்ஸ் என்று சொல்லக்கூடிய குறைந்தபட்ச இருப்பு தொகையை கட்டாயமாக்கி உள்ளன. தேசிய வங்கிகளில் 1000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பதும், தனியார் வங்கிகளில் 10 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பதும் மினிமம் பேலன்ஸ் முறையாக வைத்திருக்காவிட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு வங்கியில் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பது என்பது பெரிய கஷ்டம் இல்லை, ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் அந்தந்த வங்கி நிர்ணயம் செய்த மினிமம் பேலன்ஸை பராமரிப்பது என்பது சற்று சவாலாக இருக்கும்.

கணக்கை மூடி விடலாம்

கணக்கை மூடி விடலாம்

எனவே ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்பவர்கள் மினிமம் பேலன்ஸை மெய்ன்டெய்ன் செய்ய முடியவில்லை என்றால் அந்த வங்கிக்கணக்குகளை மூடிவிடுவது நல்லதாக இருக்கும்.

 அதிக பணம் எடுக்கும்போது

அதிக பணம் எடுக்கும்போது

ஆனால் அதே நேரத்தில் ஒரு டெபிட் கார்டில் நாளொன்றுக்கு இவ்வளவு தொகை தான் ஏடிஎம் மையத்தில் எடுக்க முடியும் என்று வங்கிகள் நிர்ணயம் செய்திருக்கும். நமக்கு அதைவிட அதிகமாக பணம் தேவைப்படும் போது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி அட்டைகள் வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும்.

 எத்தனை கணக்குகள் வைத்திருக்கலாம்

எத்தனை கணக்குகள் வைத்திருக்கலாம்

இந்தியாவை பொருத்தவரை ஒருவர் எத்தனை வங்கிக்கணக்குகள் தொடங்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை. ஒருவர் எத்தனை வங்கி கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கி கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் தொடங்கிய வங்கிக்கணக்கை குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தாவிட்டால் அந்த வங்கிக்கணக்கு செயலற்றதாகிவிடும் என்பதையும் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

what is the maximum number of bank accounts one Should Have In India?

what is the maximum number of bank accounts one Should Have In India? | இந்தியாவில் ஒருவர் அதிகபட்சமாக எத்தனை வங்கி கணக்கு தொடங்கலாம்?

Story first published: Thursday, September 22, 2022, 6:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.