இந்தியா – அவுஸ்திரேலியா T20 கிரிக்கெட் தொடர்: மற்றுமொரு போட்டி நாளை

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான T20 கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு போட்டி நாளை இந்தியாவில் நாக்பூ (Nagpu) ரில் நாளை நடைபெறவுள்ளது.

இதேவேளை இந்திய அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொகாலியில் நடந்த இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்கள் பெற்றது.

இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 30 பந்தில் 71 ஓட்டங்களும், லோகேஷ் ராகுல் 35 பந்தில் 55 ஓட்டங்களும் அதிகூடிய ஓட்டங்களாக பெற்றனர்.

இதன்பின்னர் விளையாடிய அவுஸ்திரேலிய அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரில் அவுஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2 ஆவது T20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.