வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியின் கஸ்தூரிபா காந்தி மார்க்கில் உள்ள மசூதியில், அகில இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அஹமதுவை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார். மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் சுனில் அம்பேத்கர் கூறுகையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அனைத்து தரப்பினரையும் சந்தித்து வருகிறார். தொடர் பேச்சுவார்த்தையின் ஒரு அங்கமாகும் என்றார்.
முன்னதாக நேற்று (செப்.,21) முஸ்லிம் சமுதாயத்தினரை மோகன் பகவத் சந்தித்தார். டில்லி முன்னாள் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தேர்தல் கமிஷனர் குரேஷி , அலிகார் பல்கலை முன்னள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, ராஷ்ட்ரீய லோக்தளம் தேசிய துணைத்தலைவர் ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஷெர்வானி உள்ளிட்டோருடன் நடந்த இந்த சந்திப்பின் போது, மோகன் பகவத் கூறுகையில், இந்தியா முன்னேறி செல்கிறது. இந்த நேரத்தில் வெவ்வேறு சமுதாயம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் நட்பு ஏற்படுவது அவசியம் என்றார்.
இந்த சந்திப்பின் போது, மாற்று நம்பிக்கை கொண்டவர்களை சந்திப்பது, கருத்து வேறுபாடு உள்ள விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது எனவும் இருதரப்பினரும் ஒப்பு கொண்டனர். மத நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement