ஐக்கிய நாடுகள்: எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யாவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைனுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படுகிறது. அதற்கு தண்டனை வழங்க வேண்டும் என கேட்கிறோம். எங்கள் பிராந்தியத்தை களவாடும் முயற்சிக்காக ரஷ்யா மன்னிப்பு கேட்க வேண்டும். ஆயிரகணக்கான மக்களை கொன்றதற்காக தண்டிக்கப்பட வேண்டும். பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கொடுமைப்படுத்துவதற்காக தண்டனை வழங்க வேண்டும்.
எங்கள் நாட்டிற்கு எதிராக அத்துமீறிய குற்றத்திற்காக ரஷ்யாவுக்கு தண்டனை வழங்க சிறப்பு தீர்ப்பாயம் வழங்க வேண்டும். இந்த போரை துவக்கியதற்காகவும், உக்ரைனில் ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார இழப்புகளுக்கும் ரஷ்யா தான் நிதி அளிக்க வேண்டும். ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தைக்கு வர அஞ்சுகிறது. சர்வதேச நெருக்கடிகளுக்கு பணிய மறுக்கிறது. ரஷ்யா போரும் ஒரு வகை பயங்கரவாதம் தான். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement