பிரித்தானிய நகரங்கள் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் அணுஆயுத தாக்குதலை முன்னெடுக்கலாம்
ரஷ்யாவை சிதைக்க பிரதமர் லிஸ் ட்ரஸ் திட்டமிடுவார் என்றால், லண்டன் மக்களே உங்கள் நிலை பரிதாபம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான Sergei Markov பிரித்தானியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரித்தானிய நகரங்கள் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் அணுஆயுத தாக்குதலை முன்னெடுக்கலாம் என அவர் மிரட்டியுள்ளார்.
@AP
ரஷ்யாவில் போருக்கு தயாரான வீரர்களை திரட்டி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும் பிரித்தானியாவுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
பிரித்தானிய நகரங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவுக்கு எதிராக தனது கடும்போக்கு நடவடிக்கைகளை தொடர பிரித்தானியா இன்னும் முயற்சிக்கும் என்றால், ரஷ்யாவை சிதைக்க பிரதமர் லிஸ் ட்ரஸ் திட்டமிடுவார் என்றால், லண்டன் மக்களே உங்கள் நிலை பரிதாபம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
@reuters
உக்ரைனுக்கு எதிராக போர் தொடுக்கும் தேவை ரஷ்யாவுக்கு கண்டிப்பாக இல்லை என குறிப்பிட்டுள்ள அவர்,
உக்ரைன் மக்களுக்கு எதிராக ஏன் அணுஆயுதங்களை பயன்படுத்த வேண்டும், தேவையே இல்லை என்றார்.
ஆனால், மேற்கத்திய நாடுகளால் உக்ரைன் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் இருந்து மேற்கத்திய நாடுகளே போரிடுகிறது என்றார் செர்ஜி மார்கோவ்.
@EPA
மேலும், அனைவரும் தற்போது அணு ஆயுத போர் தொடர்பில் விவாதிக்கின்றனர். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர்கள் போரிஸ் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோரின் செயற்பாடுகளின் பலனால் தான் ஏற்படும் என்றார் செர்ஜி மார்கோவ்.
@bloomberg