ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுபினராக இந்தியா அங்கம் வகிப்பதற்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது.
உலக தலைவர்கள் பங்கேற்பில் ஐ.நா.சபை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோபைடன் “ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. அமெரிக்கா நீண்ட காலமாக ஆதரித்து வரும் நாடுகளுக்காக நிரந்தர இடங்களும் இதில் அடங்கும் என்றார். ஜோ பைடனின் கோரிக்கைக்கு ஏற்ப ஐ.நா.
பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை கொண்டு வர அதிபர் ஜோபைடன் ஆதரிக்கிறார்.” என்று கூறினார்.
இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய இந்த 3 நாடுகளை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று மரபாக ஆதரவு அளிக்கின்றோம் என்றார்.
அமெரிக்கா பயணம் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில் “, இந்தியா இன்றும் சில ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதா வளர்ச்சி நாடாக மாறும்.
எனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச அமைப்புகளுக்கும் அது நல்லதல்ல என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார் .