'ஒரே நாளில் இழுத்து மூடிடுவேன்' திமுக எம்.எல்.ஏ மிரட்டல் வீடியோ!

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த சிங்கப்பெருமாள் கோவில்(Singaperumalkoil) அருகே டேஜுங் மொபட்ட என்ற தனியார் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆர்.கே.ஷர்மா என்பவர் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார்.

ஆர்கே ஷர்மா இந்த நிறுவனத்தில் சில முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த 06.8.22 அவர் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்திற்கு சென்று ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்வதோடு ஒருவரை ஒருமையில் பேசுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் எம்.எல்.ஏ ராஜா ஒருவரை திட்டுகிறார். அவர் இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் புகார் அளிக்கப்படும் எனக் கூறியதும் கோபமடைந்த எஸ்.ஆர்.ராஜா மேலும் அவரை திட்டிவிட்டு கம்பெனியை இழுத்து முடிவிடுவேன் என மிரட்டுகிறார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து செல்ல முற்படுகிறார். அப்போது எதிரில் இருந்த நபர் நானும்

காரன் தான் உங்களுக்கு ஓட்டு போட்ட எங்களுக்கே மரியாதை இல்லை, பாதுகாப்பு இல்லை என புலம்புகிறார்.

இதுகுறித்து நிறுவனத்தின் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “எங்கள் நிறுவனத்தில் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆர்.கே.சர்மா ஊழல் புகார் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் சுமார் 230 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தொலைபேசி வாயிலாக எங்களுக்கு மிரட்டல் கொடுத்தார். இந்நிலையில் இன்று திடீரென நிறுவனத்துக்குள் நுழைந்து எங்களை மிரட்டி உள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலர் அவர்களிடம் இணையதளம் மூலம் புகார் அளித்துள்ளோம்” என்றார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கூறியதாவது: “நண்பர் தனது இடத்தில் பிரச்சனை உள்ளதாக அழைத்துச் சென்றார். உரிமையாளராக இருக்கும் என் நண்பருக்கு அங்கு வாடகைக்கு இருக்கும் நபர்கள் வழி விடுவதில்லை, எனவே அதுகுறித்து விசாரிப்பதற்காகவே நான் அங்கு சென்றேன்” இவ்வாறு கூறினார்.

ஆனால், ஆளுங்கட்சி ஒருவர் பொது வெளியில் ஒருவரை ஒருமையில் பேசியதோடு, கம்பெனியை இழுத்து மூடிவிடுவேன் என மிரட்டல் விடுத்தது தொடர்பான வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.