மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு என்பது பாதுகாப்பானது மட்டுமின்றி அதிக வருவாய் தரும் வகையில் இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆனால் அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன் ஒரு குறிப்பிட்ட காலத்தை இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே நிதி ஆலோசகர்களின் ஆலோசனையாக உள்ளது.
ஒவ்வொரு இலக்குகளுக்கும் வெவ்வேறு வகையான ஃபண்ட்கள் உள்ளன என்பதும் அந்த ஃபண்ட்களை எப்படி தேர்வு செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பேவரைட் பங்கு.. இவ்வளவு பேர் வாங்கியிருக்காங்களா.. உங்ககிட்ட?
மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில், பலவகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருப்பதால் இதில் எந்த வகை நமக்கு சிறந்ததாக இருக்கும், அதே நேரத்தில் அதிக வருவாய் தருவதாக இருக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், சிறந்தது எது என்பது குறித்த புரிதல் மிகவும் அவசியம்.
சிறந்த ஃபண்ட்
பெரும்பாலும் மியூச்சுவல் ஃபண்ட் முறையில் முதலீடு செய்பவர்கள் சிறந்த செயல்திறன் மற்றும் அதிக வருவாய் கொண்ட திட்டங்களை தேர்ந்தெடுக்க முதலீட்டாளர்கள் நினைப்பதுண்டு. அதாவது கடந்த ஒருசில வருடங்களாக எந்த ஃபண்ட் அதிக ரிட்டர்ன்களை வழங்கியுள்ளது என முதலீடு செய்வதற்கு முன் ஆய்வு செய்வதுண்டு
நமக்கு பொருத்தமானதா?
அமெரிக்காவில் டிசம்பர் மாதத்தில் அங்குள்ள மக்கள் குளிர்கால ஆடைகளை அணிந்து கொள்வது வழக்கம். ஒருசிலருக்கு அது பிடித்துபோய், தாங்களும் அதே போன்று உடைகளை அணிய விரும்பலாம். ஆனால், கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு யாராவது மும்பை அல்லது சென்னை நகரத் தெருக்களில் செல்ல முடியுமா? எனவே மற்றவர் என்ன ஃபண்ட் தேர்வு செய்கிறார் என்பதை கணக்கில் கொள்ளாமல் நமக்கு எந்த ஃபண்ட் பொருந்தும் என்பதை புரிந்து கொண்டு ஃபண்டை தேர்வு செய்ய வேண்டும்
எதுவும் சிறந்த ஃபண்ட் இல்லை.
மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் என்று எதுவுமே கிடையாது. அதேபோல் மோசமான ஃபண்ட் என்பதும் இல்லை. குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இலக்கில் நமக்கு பொருத்தமானது எது? நம்முடைய முதலீட்டு தொகைக்கு சிறந்தது எது? என்பதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.
சிறந்ததை விட பொருத்தமானதே மேல்
நீண்டகால இலக்குகளுக்கு என சில மியூச்சுவல் ஃபண்ட்களும், குறுகிய கால இலக்குகளுக்கு என சில மியூச்சுவல் ஃபண்ட்களும் உள்ளன. எனவே நம்முடைய கால இலக்கை கணக்கில் கொண்டு நிதி ஆலோசகரின் அறிவுரையை பெற்று பொருத்தமான மியூச்சுவல் ஃபண்ட்களை தேர்வு செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்பவர்கள் சிறந்ததை தேடுவதை விட, பொருத்தமானதை தேடுவதே நல்லது.
How to Invest in your Every Goal with Mutual Funds?
How to Invest in your Every Goal with Mutual Funds?