ஆக்ரா, உத்தர பிரதேசத்தில் ஹோட்டல் அறையில் வேறு பெண்ணுடன் இருந்த கணவனை, அவரது மனைவி ‘வெளுத்து’ வாங்கிய ‘வீடியோ’ பரவி வருகிறது.உ.பி.,யில் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், தன் கணவன் வேறு பெண்ணுடன் இருப்பதாக மனைவிக்கு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து, அப்பெண் அந்த ஹோட்டல் அறைக்குள் அதிரடியாக புகுந்தார். அப்போது, வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவரை கையும் களவுமாகப் பிடித்த மனைவி, அவர் முகத்தில் சரமாரியாக குத்து விட்டார்; கூட இருந்த அந்த பெண்ணுக்கும் செருப்படி விழுந்தது. அடி தாங்காத அக்கணவன், ‘இனி இப்படி செய்ய மாட்டேன்; என்னை விட்டு விடு’ என கெஞ்சியும் அப்பெண் விடவில்லை. ‘நீ செய்த இந்த காரியத்துக்கு உனக்கு மன்னிப்பே கிடையாது’ எனக் கூறி கணவனையும், அவரது காதலியையும் வெளுத்து வாங்கினார். மொபைல் போன் வீடியோவில் பதிவு செய்யப்பட்ட இந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவின.
ஆக்ரா, உத்தர பிரதேசத்தில் ஹோட்டல் அறையில் வேறு பெண்ணுடன் இருந்த கணவனை, அவரது மனைவி ‘வெளுத்து’ வாங்கிய ‘வீடியோ’ பரவி வருகிறது.உ.பி.,யில் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில், தன்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்