கார்த்திக் சுப்புராஜின் பபூன் நாளை ரிலீஸ்… அதிரடி ஆக்சன் த்ரில்லருக்கு ரெடியாகும் ரசிகர்கள்

சென்னை:
இயக்குநர்
கார்த்திக்
சுப்புராஜ்
தயாரித்துள்ள
‘பபூன்’
திரைப்படம்
நாளை
திரையரங்குகளில்
வெளியாகிறது.

கார்த்திக்
சுப்புராஜ்ஜிடம்
உதவியாளராக
பணிபுரிந்துள்ள
அசோக்
வீரப்பன்
பபூன்
படத்தை
இயக்கியுள்ளார்.

வைபவ்,
அனகா,
ஜோஜூ
ஜார்ஜ்,
ஆடுகளம்
நரேன்
உள்ளிட்ட
பலர்
இந்தப்
படத்தில்
நடித்துள்ளனர்.

கார்த்திக்
சுப்புராஜ்
தயாரிப்பில்
பஃபூன்

கார்த்திக்
சுப்புராஜ்
இயக்கத்தில்
வெளியான
‘பீட்சா’,
‘ஜிகர்தண்டா’,
‘இறைவி’
திரைப்படங்கள்
மிகப்
பெரிய
வெற்றிப்
பெற்றன.
இந்தப்
படங்களில்
கார்த்திக்
சுப்புராஜிடம்
உதவி
இயக்குநராகப்
பணியாற்றிய
அசோக்
வீரப்பன்,
‘பபூன்’
படத்தின்
மூலம்
இயக்குநராக
அறிமுகமாகிறார்.
வைபவ்,
அனகா,
ஜோஜூ
ஜார்ஜ்,
ஆடுகளம்
நரேன்
உள்ளிட்டோர்
நடித்துள்ள
இந்தப்
படத்தை,
கார்த்திக்
சுப்புராஜ்
தனது
ஸ்டோன்
பென்ச்
நிறுவனம்
மூலம்
தயாரித்துள்ளார்.
பபூன்
திரைப்படம்
நாளை
(செப்
23)
திரையரங்குகளில்
வெளியாகிறது.
.

ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள பபூன்

ஆக்சன்
த்ரில்லராக
உருவாகியுள்ள
பபூன்

இயக்குநர்
கார்த்திக்
சுப்பராஜ்,
கார்த்திகேயன்
சந்தானம்,
சுதன்
சுந்தரம்,
ஜெயராமன்
தயாரிப்பில்
உருவாகியுள்ள
‘பபூன்’
படம்,
ஆக்சன்
த்ரில்லர்
ஜானரில்
உருவாகியுள்ளதாகக்
கூறப்படுகிறது.வைபவ்,அனகா
ஆகியோருடன்,
ஆந்தகுடி
இளையராஜா
முக்கிய
வேடத்தில்
நடித்துள்ளார்.
இந்நிலையில்,
‘பஃபூன்’
படத்தை
பற்றி
பேசிய
இயக்குநர்
அசோக்
வீரப்பன்,
“இது
முழுக்க
முழுக்க
ஆக்ஷன்
படம்
என்றும்,
மேடை
நாடகங்களில்
வரும்
பபூனின்
வாழ்க்கையை
மையமாக
வைத்து
எடுக்கப்பட்டுள்ளது”
என்றும்
கூறியுள்ளார்.

அதிரடி அரசியல் இருக்கும்

அதிரடி
அரசியல்
இருக்கும்

மேலும்
தொடர்ந்து
பேசியுள்ள
அவர்,
“ஒரு
பபூன்
வாழ்வில்
என்ன
நடக்கிறது
என்பது
தான்
படத்தின்
முக்கிய
கரு.
சிவகங்கை,
ராமநாதபுரம்,
தூத்துக்குடி
ஆகிய
கடலோர
மாவட்டங்களில்
உள்ள
மக்களின்
வாழ்க்கையை
மையமாக
வைத்து
இப்படம்
உருவாக்கப்பட்டுள்ளது.
தலைப்பைப்
பார்த்து
இது
காமெடி
திரைப்படமாக
இருக்கும்
என்று
நினைக்கலாம்.
ஆனால்,
‘பபூன்’
அதிரடி
அரசியல்
கதைக்களம்
கொண்ட
படமாக
இருக்கும்”
எனத்
தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பபூன்

சந்தோஷ்
நாராயணன்
இசையில்
பபூன்

இந்தப்
படத்தின்
படப்பிடிப்பு
காரைக்குடி,
ராமேஸ்வரம்,
கொல்லம்
சென்னையை
சுற்றி
நடந்ததாகவும்
இயக்குநர்
அசோக்
வீரப்பன்
கூறியுள்ளார்.
50
வருட
மேடை
நாடக
அனுபவம்
கொண்ட
மதுரை
எம்.பி.
விஸ்வநாதன்
இப்படத்தில்
வைபவின்
அப்பாவாக
நடித்துள்ளதாக
சொல்லப்படுகிறது.
முக்கியமாக
சந்தோஷ்
நாராயணனின்
இசை
படத்தின்
மிகப்பெரிய
பலமாக
இருக்கும்
எனவும்
சொல்லப்படுகிறது.
ஏற்கனவே
வெளியான
இரண்டு
பாடல்களும்
நல்ல
வரவேற்பை
பெற்றுள்ளன.
அதேபோல்,
சந்தோஷ்
நாராயணனின்
பின்னணி
இசையும்
தரமாக
வந்துள்ளதாக
இயக்குநர்
தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.