கிரெடிட் கார்டு என்பது ஒரு வரப்பிரசாதம் என்றாலும், பலரும் அதனை சரியாக பயன்படுத்துவதில்லை. சொல்லப்போனால் கிரெடிட் கார்டினை சரியான பயன்படுத்துபவர்களை விட, அதனை தவறாக பயன்படுத்தியவர்களே அதிகம்.
இத்தகைய கிரெடிட் கார்டுகளில் பயன்படுத்துவதையே தவறாக பலரும் பயன்படுத்தினாலும், பலருக்கும் தங்களுக்கு ஏற்ற கார்டு தானா? என்பதையே சரியான தெரிந்து கொள்வதில்லை.
கிரெடிட் கார்டில் இன்று பல வகையான கார்டுகள் உள்ளன. ஆனால் அதில் நமக்கு எது உகந்ததாக இருக்கும்? எதில் பலன் அதிகமாக கிடைக்கும். யாருக்கு எந்த வகையான கார்டு ஏற்றது என்பதை தெரிந்து கொள்வதில்லை.
இந்த 3 பங்குகளை வாங்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் பரிந்துரை!
காசில்லாத சமயத்தில் வரப்பிரசாதம்
உண்மையில் கிரெடிட் கார்டுகள் நம் கைகளில் காசில்லாத சமயத்தில் அது வரப்பிரசாதமாக இருக்கும். ஆனால் அதனை சரியான விதத்தில் பயன்படுத்தினால், அதனை விட சரியான ஒரு விஷயம் எதுவும் இல்லை எனலாம். ஏனெனில் அதில் ஏராளமான பலன்களை நாம் பெற முடியும். ஆக கிரெடிட் கார்டை பயன்படுத்தும் முன்பு முதலில் உங்களுக்கு ஏற்ற சரியான கார்டினை தேர்தெடுப்பதே முக்கியமான ஒரு விஷயமாகும்.
தேவையை தெரிந்து கொள்ளுங்கள்?
கிரெடிட் கார்டு வாங்கும் முன் உங்களது தேவை என்ன என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப கார்டுகளை தேர்வு செய்யலாம். அனைத்து வகையான பயன்பாட்டுக்கு உகந்த கார்டுகளில் வருடாந்திர கட்டணம் என்பது மிக அதிகமாக இருக்கும்.
ஆக நீங்கள் எதற்காக அதிக பயன்படுத்த நினைக்கிறீர்கள், உதாரணத்திற்கு நீங்கள் அதிகம் பயணம் செய்பவர் எனில், உங்களுக்கு டிராவல் கார்டு பயனுள்ளதாக இருக்கும். ஷாப்பிங் அதிகமாக செய்பவர் எனில், அதற்கேற்ப திட்டமிடலாம். இதே ப்யூல் கார்டு எனில் எரிபொருள் நிரப்ப பயன்படுத்தும் கார்டுகள் என பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபோன்ற தேவைகேற்ப திட்டமிடுகையில் அதில் பல சலுகையும் கிடைக்கும்.
கிரெடிட் ஸ்கோர்
பலரும் தங்களது கிரெடிட் ஸ்கோரினை அதிகரிக்க கிரெடிட் கார்டு பயன்படுத்த ஆரம்பிப்பர். அதுபோன்ற சமயங்களில் உங்களுக்கு எவ்வளவு தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் சேமிப்பு கணக்கு அல்லது சம்பள கணக்கின் மூலம் உங்களாது கார்டு ஒப்புதல் பெறலாம். அப்படி பெறும் போது முன் அங்கீகரிக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கிறது. பொதுவாக இதுபோன்ற கார்டுகள், இது உங்களது கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் வழங்கப்படும்.பொதுவான ஒரு கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு, உங்களுக்கு பொருத்தமானவற்றை நீங்கள் தேர்தெடுக்க வேண்டும்.
பொருத்தமானது எது?
உங்கள் தகுதி என்ன? உங்களின் தேவை என்ன? உங்களது எந்த வகையான கார்டு தேவை என்பதை தெரிந்து கொண்டாகி விட்டது. தற்போது எந்த கார்டு உங்களுக்கு பொருத்தமானது ? ஒரு கார்டினை வாங்கும் முன்பு நிபந்தனைகள், அதில் எந்த மாதிரியான சலுகைகள் எல்லாம் கிடைக்கும், இணையும் கட்டணம் எவ்வளவு, வருடாந்திர கட்டணம் எவ்வளவு? சலுகைகள் எவ்வளவு காலத்திற்கு கிடைக்கும் என்பன உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு கார்டினை பெறுங்கள்.
உத்தரவாதம் கிடைக்கும்
சில கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும் பொருட்களுக்கு உத்தரவாதம் கிடைக்கும். இதன் மூலம் உற்பத்தி பொருட்களுக்கான உத்தரவாதத்தை பெற முடியும். இதனால் உற்பத்தியாளரின் உத்தரவாதம் முடிந்தாலும், இந்த நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தினால் பலன் பெற முடியும். ஆக இதுபோன்ற சலுகைகள் உங்களது கார்டில் கிடைக்குமா என்பதை பார்த்து கொள்ளுங்கள்.
how to pick the right credit card? check details
how to pick the right credit card? check details/கிரெடிட் கார்டு வாங்க போறீங்களா.. இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சுக்கோங்க!